puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 31 ஜூலை, 2013

சிங்கப்பூர் கடலூர் முஸ்லிம் ஜமாஅத் குடும்ப ஒன்று கூடல் - மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு


சிங்கப்பூரில் வாழும் கடலூர் மாவட்ட மக்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் சிங்கப்பூர் கடலூர் முஸ்லிம் ஜமாஅத் மீண்டும் புதுபிக்கபட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக புதுவலசையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.பல்லை பாதுகாப்பது எப்படி?அவசர உலகத்தில் நாம் சிலவற்றை சரியாக கவனிக்க மறந்துவிடுகிறோம் அதில் பல்லும் ஒன்று அதை பேணுவது எப்படி.

ஹிந்துக்கள் தீவிர மத வெறியர்களா!?சுதிந்திரம் பெற்ற இந்தியாவில் தேசத் தந்தை என்று போற்றப் பட்ட காந்தியை படுகொலை செய்து விட்டு இஸ்மாயில் என்று பச்சை குத்தி முஸ்லிம்கள் மீது பழியை போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தவன் யார்??

ஆந்திராவில் தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா

'ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர சட்டத்துறை அமைச்சர் தமது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம் கொடுத்துள்ளார்.

செவ்வாய், 30 ஜூலை, 2013

தலிபான்கள் போலீஸ் சீருடையில் சிறை உடைப்பு- 300 கைதிகள் தப்பி ஓட்டம்!


on .
Prison Raid Park Eu300713
Playஏராளமான தலிபான்கள் போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் வந்து இன்று அதிகாலை (30.07) பாகிஸ்தான் சிறை ஒன்றின்மீது தாக்குதல் நடத்தி, 300 கைதிகளை விடுவித்துள்ளனர். தாக்குதலுக்கு வந்த தலிபான்கள் எந்திரத் துப்பாக்கிகள், கிரானேட் லாஞ்சர்கள், மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்ததாகவும், அவர்களில் சிலர் தற்கொலை தாக்குதலுக்கு தயாராக வந்ததாகவும் தெரியவருகிறது.

கூல் ட்ரிங்ஸ் ஷாக்!


ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்காக மலை உச்சியில் இருந்து ஹீரோ குதிப்பார், கட்டடங்களைத் தாண்டுவார், வேகமாக வரும் ரயிலை சர்வ சாதாரணமாக கடப்பார். அனைவரையும் ஈர்க்கிறது இப்படி ஒரு விளம்பரம். ஒரு குளிர்பானம்கூட வாங்க முடியாமலா இப்படி ஓடுகிறார் என்று நினைக்கத் தோன்றாமல், தாகம் எடுத்தால், நேராக கார்பனேட்டட் கோலா பானங்கள் பருகத்தான் செல்கின்றோம். குளிர்பானங்கள் குடிக்காதீர்கள் என்றால், 'நான் 'டயட்’ கூல் டிரிங்தான் குடிக்கிறேன்’ என்று சமாதானப்படுத்திக்கொள்கிறோம்.  சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானத்தில் என்ன சேர்க்கப்படுகிறது, இதைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் நாகராஜன் விரிவாகப் பேசினார்.

கருத்தடைக்கு பின்னும் கர்ப்பம் நேர்ந்தால் மருத்துவர்தான் பொறுப்பா?


கருத்தடை அறுவை சிகிச்சைக்கு நூறு சதவிகிதம் உத்தரவாதம் இல்லை' என்றால், அதைச் செய்துகொள்வதால் என்ன பலன்?

அதிமுக தலைமையில் புதிய அணி உருவாகி ஆட்சி அமைக்க சாத்தியம். Times Now கருத்துக்கணிப்பு தகவல்.


தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு 37.7 சதவீத பேரும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு 17.6 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து டைம்ஸ் நவ்-சி.வோட்டர்-இந்தியா டி.வி. சார்பில் தேசிய அளவிலான தேர்தல் கருத்து கணிப்பு நடந்தது.

அமெரிக்காவில் சர்க்கரை நோய் அதிகரிக்க கோலாதான் காரணமா? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


நம் நாட்டில் சர்க்கரை நோய் அதிகமாவதற்கு வெள்ளை அரிசி முக்கியக் காரணம் என்றால், அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வரும் சர்க்கரை நோய்க்கு கோலாவின் சோளச் சர்க்கரையே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். சர்க்கரை நோய் தவிர, உடல் பருமன், பல் சொத்தை, கவுட் (Gout) என்கிற மூட்டுவலி நோய், சிறுநீரக பிரச்னைகள், குடல்புற்றுநோய் போன்ற வியாதிகளும் இதனால் ஏற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

சனி, 27 ஜூலை, 2013

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்


- அபூ அப்துல்லாஹ் :
லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப்இருப்பார்கள்.  லைலத்துல் கத்ர் தொடர்புடைய குர்ஆன் மற்றும் ஹதீஸ் தொகுப்பு பின்வருமாறு:

புதன், 24 ஜூலை, 2013

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

jasmineதற்போது மல்லிகைப் பூ சீசன் துவங்கியுள்ளது. மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
நன்றி: தினமணி
chittarkottai thanks

டெங்கு மீண்டும் கோர முகத்தைக் காட்டுமா?


டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக் கூடும் என நம்புகிறேன்;.


இரு வாரங்களுக்கு முன் எழுதிய தற்போது பரவும் தொற்று நோய்கள் என்ற கட்டுரையில் டெங்கு பற்றி சுருக்கமாக சொல்லியிருந்தேன். இது சற்று விரிவான கட்டுரையாகும்.

2ஆம் உலக யுத்தத்தின் போது மூழ்கிய கப்பலிலிருந்து 480 கோடி ரூபா பெறுதியான வெள்ளி மீட்பு


[ புதன்கிழமை, 24 யூலை, 2013, ]
2ஆம் உலக யுத்தத்தின் போது
2ஆம் உலக யுத்தத்தின் போது கடலில் மூழ்கிய இங்கிலாந்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பலிலிருந்து சுமார் 43 ஆயிரத்து 445 கிலோகிராம் வெள்ளியை அமெரிக்காவின்
ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனமொன்று மீட்டெடுத்துள்ளது.

வால் கொண்ட சிறுவனை கடவுளாக கருதும் மக்கள்


[ புதன்கிழமை, 24 யூலை, 2013, ]
வால் கொண்ட சிறுவனை கடவுளாக
இந்­தி­யாவைச் சேர்ந்த ஒரு சிறு­வ­னொருவனின் முதுகில் வால் போன்ற அமைப்பு காணப்­ப­டு­வதால் அச்­சி­று­வனை மக்கள் கட­வு­ளாக ஆரா­தித்தி வரு­கி­றார்கள்.

கள்ளக்காதலியுடன் இருந்த தம்பியை கொன்ற அக்கா கள்ளக்காதலனுடன் சரண்


[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை, 2013, ]
கள்ளக்காதலியுடன் இருந்த
இந்தியாவில் கள்ளக்காதலியுடன் வாழ்ந்து வந்த தன் தம்பியை, தனது கள்ளக்காதலனின் துணையுடன் கொலை செய்த அக்கா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கரூர் மாவட்டம், ஒட்டையூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன், வயது-50. இவர் அந்தப் பகுதியில், ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து

ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிந்தான்?


அன்பிற்கினிய சொந்தங்களே இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து கீழ்தரமான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டும், அதன் படி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தேசபக்த அமைப்பை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது ஐரோப்பிய யூனியன்:ஈரான் கண்டனம்


லெபனானை ஆக்கிரமித்திருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தைத் தீவிரவாத அமைப்பாக சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 ஆயிரத்து 500 போலீசார் அதிகரிப்பு:800 பெண் போலீசாரும் சேர்க்கப்பட்டனர்!


சென்னையில் 800 பெண் போலீசார் உட்பட 2 ஆயிரத்து 500 போலீசார் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையங்களுக்கு ஏற்ப போலீசார்கள் இல்லாத காரணத்தினால் இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

செவ்வாய், 23 ஜூலை, 2013

ரமழானின் சிறப்புகள்


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

ramadan-kareem-7-copy
ரமழானின் சிறப்புகள்
ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183 

திங்கள், 22 ஜூலை, 2013

கருவுறுதலை அதிகரிக்கும் வைட்டமின் டி உணவுகள்!!!


காட் மீன் எண்ணெய் (Cod liver oil):
மீன் எண்ணெயின் வாசனை மற்றும் ருசி நன்றாகவே இருக்காது. இருப்பினும் அதில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூட அதிகம் உள்ளது. அதிலும் ஒரு டேபிள் மீன் எண்ணெயில் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை பெறலாம். ஆனால் எண்ணெயை குடிக்க முடியாது என்பதால், கடைகளில் விற்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரையை வாங்கி சாப்பிடுவது நல்லது.

வியாழன், 18 ஜூலை, 2013

மருத்துவப் படிப்புக்கு, தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த நடை! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

  [வியாழன் - 18 ஜூலை-2013 -
மருத்துவப் படிப்புக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததுள்ளது

புதன், 17 ஜூலை, 2013

அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலையேற்படும் : அசாத் சாலி!

July 17th, 2013


முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்தாவிட்டால் அனைத்து முஸ்லிம்களும் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராடும் நிலையேற்படும் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

டிரைவர் இன்றி தானாக ஓடும் கார்

டிரைவர் இன்றி தானாக ஓடும் கார்

July 17, 2013  04:43 pm
டிரைவர் இன்றி தானாக ஓடும் கார்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை கேமராரேடார்லேசர் உணர்வு கருவிகள்போன்றவைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன

ஏவுகணைகளை கடத்திச் சென்ற வட கொரிய சரக்கு கப்பல் பனாமாவில் சிக்கியது!


on .
North Korean Missiles Eu17072013
Playவட கொரியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று பனாமா கால்வாயின் சென்று கொண்டிருந்தபோது சோதனையிடப்பட்டதில், பலாஸ்டிக் ரக ஏவுகணைகள் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த சர்க்கரை மூடைகளுக்கு கீழே கன்டெயினர்களில் ஏவுகணைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கப்பல் கியூபாவில் இருந்து வடகொரியா நோக்கி சென்று கொண்டிருந்ததாக,

பெருநாட்டில் 6.2 ரிக்டர் அளவில் கடும் நில நடுக்கம்!

பெருநாட்டில் 6.2 ரிக்டர் அளவில் கடும் நில நடுக்கம்!

on .
Earthquake Eu170713
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெருநாட்டில் தென்பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமும் பீதியும் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். இந்த நிலநடுக்கம் ஆர்கியூபாவின் வடமேற்கே பூமிக்கு அடியில்...
84.கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்களும், காயமடைந்தவர் விவரங்களும் வெளியிடப்படவில்லை.

eutamila thanks

செவ்வாய், 16 ஜூலை, 2013

குளவிக்கூட்டுடன் உடலுறவு கொண்ட பன்னாடை! – படம் இணைப்பு!


குளவிக்கூட்டுடன் உடலுறவு கொண்ட 35 வயதான நபர் ஒருவர் கொடூர மரணம் அடைந்த சம்பவம், சுவீடனின் Ystad பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ystad பகுதியில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் நிர்வாண ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒரு பகுதியாக, அச் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

திங்கள், 15 ஜூலை, 2013

தொண்டை வலிகள் ஏன், ஆன்ரிபயோரிக் மருந்துகள் எப்போதும் அவசியமா? 'உங்களுக்குத் தெரியும்தானே டொக்டர். வழக்கமான பிரச்சனைதான். டொன்சில். ஸ்ரோங்கான அன்ரிபயோடிக் போட்டால்தான் எனக்கு நிற்கும்'.

தொண்டை வலி மட்டும் அவருக்கு இருந்தது. காய்ச்சலோ விழுங்குவதில் சிரமமோ இல்லை என்பது விசாரித்தபோது தெரியவந்தது.

சனி, 13 ஜூலை, 2013

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடலில் மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்து 88 பேரை ஆஸ்திரேலிய மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர். காணாமல்போயுள்ள 8 பேரை தேடிவருகின்றனர்.
ஆண் குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஆப்கானிஸ்தான், இரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே படகில் இருந்துள்ளதாகத் தெரியவருகிறது.இந்தோனேசியாவிலிருந்து இந்தப் படகு புறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பெரும் எதிர்ப்பையும் பிரச்சினைகளையும் சந்தித்திருந்த தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திப் பணிகள் ஆரம்பித்துள்ளன

கூடங்குளம் அணுமின் நிலையம்

பெரும் எதிர்ப்பையும் பிரச்சினைகளையும் சந்தித்திருந்த தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திப் பணிகள் ஆரம்பித்துள்ளன.

குழந்தையைப் பெற்று உயிரோடு புதைத்துவிட்டு தாய் தலைமறைவு!


on .
Baby Murder Eu13072013
வவுனியாவில் தான் பெற்றெடுத்த குழந்தையை தாய் மண்ணுக்குள் புதைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது

மதுரைக்கு வந்த சோதனை: தமிழில் வாதாடினால், வழக்குகள் தள்ளுபடி!


on .
Madurai Higt Court Eu13072013
மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இரு வழக்குகளில் வழக்கறிஞர் தமிழில் வாதாடியதால், அந்த வழக்குகளை நீதிபதி தள்ளுபடி செய்த சம்பவம், வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புலவர் சுந்தர்ராஜன் என்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியர், தனது புதிய வீட்டிற்கு பிளான் அப்ரூவல் வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் ...

வியாழன், 11 ஜூலை, 2013

நிழல் தந்த மரம்!

நிழல் தந்த மரம்!


தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

புதன், 10 ஜூலை, 2013

ஐரோப்பிய நாடுகளில் கருமுட்டை தானம் பெறுவது அதிகரிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கருமுட்டை தானம் பெறுவது அதிகரிப்பு

July 10, 2013  04:40 pm
குழந்தையில்லாத பெண்களுக்கு கருமுட்டைகளை அளிக்கும் கலாச்சாரம் தற்போது ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒரு பெண் சாதாரணமாக 10லிருந்து 15 கருமுட்டைகளை அளிக்க இயலும். 

மனைவியைக் கொன்றதை மறைக்க வீட்டை தீவைத்து கொளுத்திய வாலிபர்

மனைவியைக் கொன்றதை மறைக்க வீட்டை தீவைத்து கொளுத்திய வாலிபர்
July 10, 2013  04:44 pm
சவுதி அரேபியாவில் இளம்வயது மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு,கொலையை மறைக்க வீட்டை தீயிட்டு கொளுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

தடையை மீறி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற பல்லாயிரக்கணக்கான தமுமுகவினர் கைது! - வீடியோ தொகுப்பு

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பல்லாயிரக்கணக்கானோர் கைது! புகைப்படங்கள்


இளவரசன் மரணம்: நீதி விசாரணை தேவை


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் இளவரசனின் மர்ம மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 5 ஜூலை, 2013

மெக்ஸிகோவில் குமுறும் எரிமலையால் விமான சேவைகள் ரத்து

போப்போகத்தேபெத்ல் எரிமலை
போப்போகத்தேபெத்ல் எரிமலை
மெக்ஸிகோவில் குமுறிக்கொண்டிருக்கும் எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல்புகை காரணமாக அந்நாட்டுக்கான விமானப் பயணங்களை அமெரிக்க விமான சேவைகள் ரத்துசெய்துள்ளன.

தில்லி பாலியல் வல்லுறவு: இளம்பிராய சந்தேக நபர் மீதான வழக்கு முடிந்தது

இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோரி இந்தியாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோரி இந்தியாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன
தில்லியில் சென்ற வருடம் யுவதி ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த இந்தியாவை உலுக்கிய சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இளம்பிராய குற்றச் சந்தேகநபர் ஒருவர் மீது நடந்துவந்த வழக்கு முடிவடைந்துள்ளது.

சவுதியிலிருந்து வெளியேற ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பம்

புதிய சட்டத்தால் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து 16,000 க்கும் அதிகமானவர்கள் சவுதியிலிருந்து வெளியேற தற்காலிக அனுமதி பத்திரத்தை கோரியுள்ளார்கள் என சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களைத் தடுக்க கொள்கை வகுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் காலப்பிரச்சாரங்களின் போது இனி அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் வகையில் கொள்கை வகுக்குமாறு தேர்தல் ஆணையகத்திற்கு உச்ச நீதிமன்றம் வலியிறுத்தியுள்ளது.

கடன் வட்டியை குறைக்க வங்கிகள் முன்வரவேண்டும் : ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்!


கடன் வட்டியை குறைக்க வங்கிகள் முன்வரவேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் வலியுறுத்தி உள்ளார்.

இனி ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக் கிழமை அன்று விடுமுறை!:ஞாயிறு கடைகள் இருக்கும்


ரேஷன் கடைகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதால், வெள்ளிக் கிழமைகளில் ரேஷன் கடைகள் இயங்காது. அதற்குப் பதிலாக ஞாயிற்று கிழமை இயங்கும் என்றும் தெரிய வருகிறது.

செவ்வாய், 2 ஜூலை, 2013

நக்சல் தாக்குதலில் ஐந்து காவல் அதிகாரிகள் பலி

நக்சல் கிளர்ச்சியாளர்கள்

இந்தியாவின் கிழக்கேயுள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

குரங்குகளுக்கும் குடும்பக் கட்டுப்பாடு

குரங்குக்கு அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் திருமுருகன்
குரங்குக்கு அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் திருமுருகன்
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் காணப்படும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் புகுந்து உணவுகளைத் திருடிச் செல்லும் குரங்குகள் தோட்டங்களை நாசம் செய்வதுடன் சில நேரங்களில் மனிதர்களையும் தாக்குகின்றன. குரங்குகள் கடிப்பதால் சொறி சிரங்கு முதல் காசநோய் வரை பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முஸ்லீம் பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் முளைத்த புத்தர் சிலையால் சர்ச்சை

தொடரும் புத்தர் சிலை சர்ச்சைகள்.....
மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவும் தொற்று நோய்கள்

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. யாரைப் பார்த்தாலும் வருத்தம் என்கிறார்கள். திடீரென ஏற்பட்ட சீதோசன மாற்றங்கள் காரணம் என்பதில் ஐயமில்லை. கடலோடு மீனவர்கள் காணமல் போவது மட்டுமின்றி தரையிலும் பலரையும் படுக்கையில் கிடத்துகிறது. ஒரு சிலர் பாடையில் போகவும் நேராமலிருக்க அவதானமாக இருப்போம்.

நன்றி: www.saigon-gpdaily.com.vn

இந்த காலநிலை மாற்றங்களால் தற்போது கொழு்ம்பு மற்றும் தென்பகுதிகளில் பரவும்

புகைமூட்டம் தொடர்பான சலுகைகள் தொடரும்: அமைச்சர் ஏமி


Tuesday, July 2nd, 2013
tmlogo5
சிங்கப்பூரில் புகைமூட்ட நிலைமை மேம்பட்டிருந்தாலும், தனியார் மருந் துவர்களைப் பார்க்கச் செல்லும் வசதிக் குறைந்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளில் தளர்வு ஏற்படுத்தப்படாது என்று சுகாதார, மனிதவள துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 1 ஜூலை, 2013

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


30/6/2013


புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 13 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம்  EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.


30/6/2013 புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில்

30/6/2013 புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 13 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.