puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 6 ஆகஸ்ட், 2016

வளமான எதிர்காலம் தரும் உணவு, தோட்டக்கலை படிப்புகள்

food glenda1-1
வைரஸ், பூஞ்சை காளான், நுன் கிருமிகளாலேயே உணவு கெட்டுப் போகிறது. உணவு கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? உணவை எப்படி பதப்படுத்தலாம், உணவில் உள்ள எந்த சத்துக்களும் கெட்டுப்போகாமல் எவ்வாறு சேமித்து வைக்கலாம்; காலத்திற்குத் தகுந்தாற்போல் புதிய உணவுப் பொருள்களை கண்டுபிடித்தல் இப்படி பல விஷயங்களை கற்றுத் தருவதுதான் புட் டெக்னாலஜி என்று சொல்லப்படும் உணவு தொழில்நுட்பம்.

பி.டெக். ஃபுட் பிராசசிங் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு உணவு மேம்படுத்தல் சம்பந்தமான பாடப்பிரிவைக் கொண்டுள்ளது. உணவுப் பொருட்களான காய்கறி, பழ வகைகளை விளைவிக்கும் முறை, உணவுப் பொருட்கள் குறித்த சகலவிதமான பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டப்படிப்பை முடித்தவர்கள் பால் பண்ணை, ரோலர் ஃபிளவர் மில் என உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திலும் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. மேலும், சுயமாக தொழில் தொடங்கவும் முடியும் என்பதால், தாராளமாக பிடெக். ஃபுட் பிராசசிங் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை எடுத்துப் படிக்கலாம்.
உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்தலோடு நின்றுவிடுவதில்லை உணவுத் தொழில்நுட்பம். நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைக்கும் தகுந்தமாதிரி புதுமாதிரியான உணவுப் பொருட்களை கண்டுபிடிப்பதிலும் புட் டெக்னாலஜியின் பங்கு மிக முக்கியமானது.
உணவு தயாரிப்பு நிறுவனம், உணவு ஆராய்ச்சிக் கழகம், ஓட்டல்கள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், அரசு நிறுவனங்களில் செயல்படும் உணவு விடுதிகள், அரசுத் துறையில் உணவு ஆய்வாளர் பணி, ஹெல்த் இன்ஸ்பெக்டர் போன்ற பணிகளும், ப்ரீலான்ஸ் ஆலோசகராகவும் பணிபுரிந்து கைநிறைய சம்பளம் பெற புட் டெக்னாலஜி படிப்பு பெரிதும் கைக்கொடுக்கும்.
புட் டெக்னாலஜி படிப்பை சிறந்த முறையில், மைசூரில் இயங்கி வரும் மத்திய உணவு தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படிக்கலாம்.
பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் எடுத்து படித்திருந்தால் போதுமானது. முதுநிலை பட்டப்படிப்பு படிக்க இயற்பியல், கணிதம், பயோ கெமிஸ்ட்ரி, ஹோம்சயின்ஸ், நியூட்ரிசன், ஹோட்டல் மேனேஜ்மென்டில் பட்டப்படிப்பும், பி.டெக்கில் புட் டெக்னாலஜி படித்திருந்தால் முதுநிலைப் படிப்பில் நேரடியாக சேரலாம்.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிராப் பிராஸசிங் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் பி.டெக். (ஃபுட் பிராஸசிங் என்ஜினீயரிங்) படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு மாணவர்கள் பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஃபுட் பிராஸசிங் என்ஜினீயரிங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர மாணவர்கள் ஃபுட் பிராஸசிங் என்ஜினீயரிங், ஃபுட் டெக்னாலஜி, அக்ரிக்ல்ச்சுரல் என்ஜினீயரிங், அக்ரிக்ல்ச்சுரல் பிராஸஸ் என்ஜினீயரிங் படிப்பில் ஏதேனும் ஒன்றில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். மாணவர்கள் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.எச்டி படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவின்கீழ் இளநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
பி.டெக். ஆர்டிகல்ச்சர் (தோட்டக்கலை) பட்டப்படிப்பு படிப்பவர்கள் சுயதொழில் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. காய்கறி, பழ வகைகள், பூக்கள் குறித்த பாடப்பிரிவுகள் இதில் உள்ளன. தோட்டம் அமைத்து, அதில் காய்கறி, பழம், பூக்களை எவ்வாறு உற்பத்தி செய்து, தொழில் தொடங்கி மேன்மை அடையலாம் என தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த பட்டப்படிப்பு அமைந்துள்ளது. கோவை வேளாண்மை பல்கழைக்கழகத்தில் 30 இடங்கள் உள்ளன. இந்த பட்டப்படிப்பு படிப்பவர்களும் இரட்டை பட்டப்படிப்பு படிக்கலாம்.
Central Food Technological Research Institute, Mysore - 570020. ... Research, Ministry of Science &Technology, Govt. of India, Mysuru - 570 020, INDIA. http://www.cftri.com
Tamil Nadu Agricultural University, Coimbatore +91 422 6611200
info@tnau.ac.in & http://www.tnau.ac.in/
Indian Institute of Crop Processing Technology - http://www.iicpt.edu.in/ Phone:04362 228 155 Contact No. : 91 4362 228155 Mail Id : director@iicpt.edu.in

news samooganeethi thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக