puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 2 அக்டோபர், 2013

டெல்லி போலீஸ் தீவிரவாதிகளாக்கிய இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை!


arrest
புதுடெல்லி: டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு தீவிரவாத முத்திரை குத்தி பொய் வழக்கில் கைது செய்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை டெல்லி விசாரணை நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துள்ளது.
கஷ்மீரைச் சார்ந்த ஜாவேத் அஹ்மத் தந்த்ரே, ஆஷிக் அலி பட் ஆகியோரை நிரபராதிகள் என்று கண்டறிந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு அதிகாரிகள் தங்களுடைய பதவி உயர்வுக்காக நடத்திய கைது நாடகம் என்பது தெளிவானதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்ந்து தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொய் வழக்குகளில் முஸ்லிம்களை கைது செய்யும் டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவுக்கு பெரும் பின்னடைவாகும்.
2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி சுதந்திர தினத்தில் டெல்லியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டி டெல்லி ஸ்பெஷல் போலீஸின் சிறப்பு பிரிவு இருவரையும் கைது செய்தது.
அன்றைய டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு இணை கமிஷனராக இருந்த பி.என். அகர்வால், செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்விருவரையும் கொடிய தீவிரவாதிகளாக சித்தரித்தார்.
தரியாகஞ்சில் ஒரு தொலைபேசி பூத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு ஃபோன் செய்து பேசிக்கொண்டிருக்கும்போது இருவரையும் கைது செய்ததாக போலீஸ் கூறியது. இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வந்தவர்கள் என்றும் கதைகளை அளந்தது ஸ்பெஷல் பிரிவு.
ஆனால், டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவின் வாதங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தவிடுபொடியானது. போலீஸின் வாதங்களுக்கும், ஆதாரங்களுக்கும் இடையே மிகுந்த முரண்பாடுகள் இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.
இவர்கள் பயணித்ததாக போலீஸ் கூறும் ஸாண்ட்ரோ காரில் ரகசிய அறைகளில் இரண்டு ஏ.கே. 47 துப்பாக்கிகள், நான்கு 120 ரவுண்ட் தோட்டாக்கள், இரண்டு கிரேனேடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக போலீஸ் கூறியது.
ஆனால், இவ்வளவு ஆயுதங்களை வைக்கும் அளவுக்கு போதிய அறைகள் எதுவும் காரில் இல்லை என்பது நீதிமன்றத்திற்கு தெரிய வந்தது. ஆயுதங்களை கைப்பற்றியபோது காரின் உள்ளே வைத்து எடுத்த ஃபோட்டோக்கள் என்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஃபோட்டோக்களும் போலீசிற்கு எதிர்வினையை உருவாக்கியது.
அந்த ஃபோட்டோக்களில் சிமெண்ட் தரையில் ஃபோட்டோக்கள் வைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் கைது செய்தபோது அங்கிருந்த எவரையும் சாட்சிகளாக ஆஜர்படுத்த போலீஸால் முடியவில்லை.
நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்கள் தாங்கள் அப்பாவிகள் என்பதை நிரூபிக்க நான்கு ஆண்டுகளாக படாத பாடு பட்டபோது, அவர்களை கைது செய்த போலீசுக்கோ பதவி உயர்வுகள் கிடைத்தன.
துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சந்திரிகா பிரசாத் தற்போது இன்ஸ்பெக்டர் ராங்கில் ஸ்பெஷல் பிரிவில் ஒரு டீமை வழி நடத்துகிறார். இன்வெஸ்டிகேஷன் ஆபீசராக இருந்த சஞ்சீவ் யாதவ் கூடுதல் டி.சி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்ஸ்பெக்டர்களான ஹிருதய் பூஷண், லலித் மோகன் நேஜி ஆகியோர் டீம் தலைவர்களாக உள்ளனர்.
அன்றைய இணை கமிஷனர் பி.என். அகர்வால் கடந்த மாதம் டி.ஜி.பி. ரேங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.
thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக