puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 25 அக்டோபர், 2013

பள்ளி வளாகத்திற்குள் படையெடுத்த சிலந்திகளால் மூடப்பட்ட பள்ளி!

பள்ளி வளாகத்திற்குள் படையெடுத்த சிலந்திகளால் மூடப்பட்ட பள்ளி!

















இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள குளுசெஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியான டீன் அகடெமியில் நேற்று திடீரென சிலந்திகள் அதிகளவில் பரவலாகக் காணப்பட்டதால் அந்தப் பள்ளி மூடப்பட்டது. 


இந்த சிலந்திகள் கொடிய விஷத்தன்மை கொண்ட கருப்பு விதவை சிலந்திகளின் ஒரு வகை என்றும் கூறப்பட்டன. விதவை சிலந்திகளே ஆபத்தானவை என்றும் பள்ளியில் காணப்பட்ட சிலந்திகள் மனிதர்களைக் கடித்ததில்லை என்றும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. ஆயினும்இந்த சிலந்திகளின் நோய்த்தொற்று நீக்கவேண்டி உள்ளூர் நிர்வாகிகள் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

விதவை சிலந்திகளை போன்று ஸ்டியோடேட்டா நொபிலிஸ் என்ற வகை தற்போது இங்கிலாந்தில் பரவலாகக் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் கொடிய விஷமுள்ள சிலந்திகளின் 12 வகைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆயினும் சிலந்தி கடித்த சம்பவங்கள் அங்கு குறைவு என்றும்அவ்வாறு இருந்தாலும் அது மிகப்பெரிய ஆபத்தைக் கொடுப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

சிலந்திக் கடி தேனீ கொட்டுவது போலவும்வீங்கியும் காணப்படும் என்றும் ஆனால் யாரும் இறப்பதற்கு சிலந்திக்கடி காரணமாக இருந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை கொடுமையான சிலந்திகள் இல்லை. மேலும்,அவை மனிதர்களைத் தேடியும் வரவில்ல என்று வெப்ப மருத்துவம் சார்ந்த லிவர்பூல் பள்ளியில் பேராசிரியராக பணிபுரியும் டேவிட் லல்லு கூறுகின்றார். இந்த வகை சிலந்திகள் கடித்தால் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அசௌகரியமாக இருக்கும் ஆனால் அது மிகவும் அரிதாக நடைபெறும் ஒரு விஷயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

thamilan THANKS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக