puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 19 செப்டம்பர், 2013

முஸாஃபர்நகர் கலவரம்: அரசியல் கட்சித் தலைவர்களை கைது செய்ய பிடிவாரண்ட்!


muz
முஸாஃபர்நகர்: உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த கலவரம் தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 16 பேரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

முஸாஃபர்நகர் மாவட்டத்திலும் அதன் அண்டை மாவட்டங்களிலும்  சாதாரண தகராறை வகுப்புவாத வெறியூட்டி ஹிந்துத்துவா தீவிரவாத சக்திகளும், ஜாட் இனத்தவர்களும் சேர்ந்து நடத்திய  வகுப்புக் கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் இப்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. காதிர் ராணா, அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மெளலானா ஜமீல், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், பர்தேந்து சிங், காங்கிரஸ் தலைவர் ஸயீத் உஸ்மான் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்பட 16 பேரை கைது செய்ய முஸாஃபர்நகர் நீதிமன்றம் புதன்கிழமை வாரண்ட் பிறப்பித்தது.
கலவரத்தின்போது முஸாஃபர் நகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதற்காகவும், மாவட்டத்தில் நடந்த பல்வேறு கூட்டங்களில் (மகா பஞ்சாயத்து) வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காகவும் இவர்கள் தேடப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
எனினும் இதுவரை இவர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், இன்னும் 2 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் கூறினர். மேற்கண்ட 16 பேரையும் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மூத்த காவல்துறை எஸ்.பி. பிரவீண் குமார் கூறுகையில், “கலவரம் தொடர்பாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்துள்ளோம். சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன. மேலும் பல சாட்சியங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். தவறு செய்தவர்கள் இன்னும் 2 நாள்களில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மாநில சட்டப் பேரவையில் பேசுகையில், “இந்தக் கலவரமானது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும். நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஓரு கட்சி அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இக்கலவரம் நிகழ்த்தப்பட்டது” என்று குற்றம்சாட்டினார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, மாநிலத்தின் சூழலைக் கெடுக்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கலவரப் பகுதிகளைப் பார்வையிட முசாஃபர்நகர் மாவட்டத்துக்குள் நுழைய முயன்ற டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதின் ஷாஹி இமாம் ஸயீத் அஹ்மது புகாரியை காஸியாபாதில் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது, கலவரம் தொடர்பாக மாநில அமைச்சர் ஆஸம் கானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸயீத் அஹ்மது புகாரி கோரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: முஸ்லிம் சமுதாயத்துக்காக ஆஸம் கான் எதுவும் செய்துவிடவில்லை. வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார். அவர் நடந்துகொண்ட விதம் காரணமாகத்தான் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டது. எனவே, கட்சித் தலைவர் முலாயம் சிங் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் ஸயீத் புகாரி.
thoothuonline thanks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக