puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 19 செப்டம்பர், 2013

சும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்! தயாரா?

சும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்! தயாரா?


அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா புதிய ஆய்வு ஒன்றுக்காக தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருக்க ஆள் தேடி வருகிறது.


இதற்கு 5000 அமெரிக்க டொலர் (சுமார் ரூ.3.15 லட்சம்) மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பெட் ரெஸ்ட் ஸ்டடி என்ற ஆய்வுக்காக இந்த தேடுதல் என்று நாசா தெரிவித்துள்ளது.


மைக்ரோ கிராவிட்டி என்ற புவிஈர்ப்பு குறித்த ஆய்வுக்காக தெரிவு செய்யப்படுபவர்கள் எந்த வேலையும் செய்யாமல் தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருந்தால் போதும் என்கிறது ஆய்வு குழு.


ஜான்சன் ஸ்பேஸ் மையத்தில் உள்ள பிளைட் என்லாக் புராஜக்ட் குழு, விண்வெளி செல்லும் வீரர்களின் பணியை எளிதாக்கும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.


ஆய்வுக்கு ஒப்புக் கொள்பவர்கள், 70 நாட்கள், 24 மணி நேரமும் ஒரு சில பரிசோதனைகளுக்காக மட்டுமன்றி மற்ற நேரங்களில் தொடர்ந்து ‘ஹெட் டவுன் பெட் ரெஸ்ட் பொசிஷனில்(தலைகீழாக) இருக்க வேண்டும்.


விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் எடையில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள, பெட்டில் படுத்திருப்பவர்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.


ஆய்வுக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு எலும்பு, தசை, இதயம், நரம்பு மண்டலம், சுழற்சி மண்டலங்கள் உணவு மற்றும் எதிர்ப்பு சக்தி குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.


ஆய்வுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக