puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 14 ஜூன், 2013

அரசு பேருந்துகளில் டீசல் நிரப்புவதில் தனியார் பங்குகளின் தில்லுமுல்லு:அரசுக்கு வருவாய் இழப்பு!


குமரி மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் உடந்தையுடன், தனியார் பெட்ரோல் பங்குகளில் டீசல் ரீடிங்கில் தில்லுமுல்லு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மாநில அரசு போக்குவரத்துத் துறைக்கு வழங்கப்பட்டுவந்த டீசலுக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்ததால் நிதி நெருக்கடி காரணமாக, தனியார் பங்குகளில் அரசு பேருந்துகள், மற்றும் போக்குவரத்துத் துறை வாகனங்களுக்கு டீசல் வாங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால்,  லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 10  லாபம் கிடைக்கும் அனால் இதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

தினமும் பல ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்படும் நிலையில், மறைமுகமாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பலர் பயன் அடைந்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் 11 டெப்போக்களில் சுமார் 740 பேருந்துகள் இயங்குகின்றன. அவைகளுக்கு பல ஆயிரம் லிட்டர் அன்றாடம் தனியார் பங்குகளில் டீசல் பிடிக்கப்படுகிறது. இவற்றை  பங்குகளில் போக்குவரத்துத் துறையை சேர்ந்த அதிகாரிகள் சூப்பர்வைசர்களாக உள்ளனர். இதில் சில சூப்பர்வைசர்கள், மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கொடுத்து விடுவதாகவும் குற்றசாட்டு உள்ளது. இதன் மூலம் குமரி  மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், சிலர் தினசரி பல ஆயிரங்களைப் பார்த்து விடுவதாகவும் கூறப்படுகிறது. அரசுக்கு ஒரு லிட்டர் டீசலில் ரூபாய் 10 லாபம் கிடைக்கவேண்டும். ஆனால், கிடைப்பதோ வெறும் 5 ரூபாய்தான்.

ஒரு லிட்டர் டீசலுக்கு 6  கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும் என்று அதிகாரிகள கட்டாயப் படுத்துகின்றனர். குறைவான அளவு  டீசலைக் கொண்டு எப்படி 6 கிலோ மீட்டர் தூரம் செல்ல முடியும், என்று ஓட்டுனர்கள் குமுறுகின்றனர். ஆனால், பழிவாங்கப்படுவது அப்பாவி டிரைவர்கள்தான். கமிஷன் கொடுக்கும் தனியார் பங்குகளில் மட்டுமே டீசல் நிரப்பப்படுகிறது. மறுத்தால் டீசல் சப்ளை வேறு பங்குகளுக்கு மாற்றப்படுகிறது என்கின்றனர் விவரம் அறிந்த ஓட்டுனர்கள்.

குமரி மாவட்டத்தில், பேருந்துகளுக்கு தனியார் பங்குகளில் நிரப்படும் டீசலுக்கு, லிட்டர் ஒன்றுக்கு 5 மில்லிகிராம் கழித்துவிட்டு நிரப்பலாம் என்கிற விதி விலக்கு பங்குகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த அளவை ரீடிங்கில் சரி செய்து கொள்ள வேண்டும் என்கிற கெடுபிடியும் உள்ளதாம்.குமரி மாவட்டத்தில் உள்ள 740 அரசு பேருந்துகளுக்கு இப்படி 5 மில்லிகிராம் குறைப்பதன் மூலம் தினசரி பல லட்சங்கள் அதிகாரிகளின் பாக்கெட்டுக்களுக்கு சென்று விடுகிறது, என்கிற குற்றசாட்டும் எழுந்துள்ளது. இது தவிர சில பங்குகளில் ஒரு லிட்டருக்கு 40 பைசா கமிஷன் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

4TAMILMEDIA  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக