puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 29 ஜூன், 2013

இறந்தவர்களுக்கான பண்டைய ஆலயம் பெருவில் கண்டுபிடிப்பு

தென்னமெரிக்காக் கண்டத்தின் மேற்கே 13 ஆம் நூற்றாண்டில் பண்டைய 'இன்கா' நாகரிகம் நிலவியதாகக் கருதப்படும் நாடான பெருவில் சமீபத்தில் மரணமடைந்தவர்களைப் புதைக்கும் கல்லறையும் இறந்தவர்களுக்கான ஆலயமும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இவை இன்கா நாகரிகத்துக்கும் முற்பட்டவை எனக் கூறப்படுகின்றது.

பல மாதங்களாகத் தோண்டப் பட்டுக் கண்டு பிடிக்கப் பட்ட இந்த கல்லறையில் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப் பட்ட மூன்று அரசிகள் மற்றும் அவர்களின் பணியாட்களின் சடலங்களும் அவர்களின் இறப்புக்குப் பின்னர் தேவைப் படலாம் எனக் கருதப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் நாணயங்களின் புதையலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆங்கிலத்தில் ஹுவார்மே ஆற்றங்கரையில் அமைக்கப் பட்ட கோட்டை எனப் பொருள் படும் விதத்தில் EI de Huarmey என அழைக்கப்பட்ட இக்கல்லறை தெற்கு பெருவின் கடற்கரையோரத்தில் மௌசோலெயம் (Mausoleum) என்ற பிரமிட்டின் உள்ளே அமைந்துள்ளது.

எனினும் நேஷ்னல் ஜியோகிராஃபிக் சேனலின் குழுவினால் இது இறந்தவர்களுக்கான ஆலயம் என அழைக்கப் படுகின்றது. மேலும் இக்கல்லறையில் புதைக்கப் பட்ட அரச குமாரிகளும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த வாரி (Wari) எனும் அரச பரம்பரை தெற்கு பெருவை கி.பி 1000 இல் சுமார் 40 000 பேரை ஆண்டவர்கள் என்றும் இன்கா சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு முற்றுகையிடும் போது இவர்களே ஆட்சியில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இக்கல்லறையில் 30 டன் சரளைக் கல் தோண்டியெடுக்கப் பட்ட பின்னரே அரச குமாரிகளினதும் பணியாட்களினதும் எலும்புச் சுவடுகள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் இவர்களுடன் தங்கத் தோடுகள், வெள்ளி மற்றும் செப்பு ஆபரணங்கள், வெண்கல வாள்கள் மற்றும் வெள்ளிக் கிண்ணங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.தற்போது இந்த கல்லறையைப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக