Tuesday, June 25th, 2013
மலேசிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை சாதாரண உடை அணிந்த காவல்துறையினர் இழுத்துச் செல்கின்றனர். படம்: ஏஎப்பி
கோலாலம்பூர்: மலேசியாவில் தேர்தலுக்குப் பிறகு முதன் முறையாக நேற்று நாடாளுமன்றம் கூடிய வேளையில் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டக் காரர்கள் ஒன்று திரண்டனர்.
அவர்கள் காவல்துறையினரின் தடை வேலியைத் தாண்டி நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினருக்கும் ஆர்ப் பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களில் 25 பேரை மலேசியக் காவல்துறை கைது செய்தனர். அவர்கள் ‘பிளாக் 505’ உறுப்பினர்கள் என்று காவல்துறையினர் கூறினர்.
அவர்கள் போலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது மற்ற தொண்டர்கள் கடும் வார்த்தைகளால் காவல்துறையினரை சாடியதாகவும் கைது செய்தவர் களை விடுவிக்குமாறு அவர்கள் கூக்குரல் எழுப்பியதாகவும் கூறப் பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப் பாட்டக்காரர்களை உடனடியாக அந்த இடத்தை விட்டுச் செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்திக் கூட்டத்தினரைக் கலைக்க காவல்துறையினர் ஆயத்தமாக இருந்ததாகவும் தகவல்கள் கூறின. நாடாளுமன்றத்தில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்ட நேரத்தில் வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலி சாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே பாடாங் மெர்போக்கில் கடந்த சனிக்கிழமையிலிருந்து முகாமிட்டுள்ள தொண்டர்களும் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களை மலேசிய பட்டதாரிகள் ஒருங்கிணைப்பு இயக்கத்தினர் என்று கூறிக்கொண்டனர்.
விவரம்: அச்சுப் பிரதியில்
tamilmurasu thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக