puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 4 மே, 2013

ஊடக சுதந்திர தினத்தில் கஷ்மீரிகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த அனுமதி மறுப்பு!


        

World Press Freedom Day
புதுடெல்லி:உலக ஊடக சுதந்திர தினமான நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதற்கான அனுமதி கஷ்மீரிகளுக்கு மறுக்கப்பட்டது.
திஹார் சிறையில் கூட்டு மனசாட்சியின் படி அநியாயமாக இந்திய அரசால் கொல்லப்பட்ட அப்ஸல் குருவின் உடலை ஒப்படைக்கவேண்டும், கறுப்புச் சட்டமான பப்ளிக் செக்யூரிட்டி ஆக்டை வாபஸ் பெறவேண்டும், பலம் பிரயோகித்து காணாமல் போகும் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜே.கே.எல்.எஃப் தலைவர் யாஸீன் மாலிக், காணாமல் போனவர்களின் பாதுகாவலர்களின் அமைப்பான எ.பி.டி.பியின் கன்வீனர் பர்வீன் அஹன்கர் மற்றும் கஷ்மீரிகளும் இணைந்து ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், போலீஸ் அனுமதி மறுத்தது. மேலும் உண்ணாவிரதப் போராட்டம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் என்ற போலியான காரணத்தைக் கூறி போலீஸ்  யாஸீன் மாலிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுச் செய்ததுடன், நேற்று வலுக்கட்டாயமாகவிமானத்தில் ஏற்றி கஷ்மீருக்கு அனுப்பிவைத்தது. இதனைக் கண்டித்து மாலிக்குடன் வந்த கஷ்மீரிகள் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடுச் செய்தனர்.
சி.ஆர்.பி.பி தலைவர் எஸ்.ஏ.ஆர்.கிலானி, பர்வீன் அஹன்கார், சீமா முஸ்தஃபா, ஆர்.டி.எஃப் தலைவர் ஜி.என்.சாய்பாபா, புரட்சி கவிஞர் வரவரராவ்,பி.டி.சர்மா, சரோஜ் கிரி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு வந்திருந்தனர். ஆனால், பஜ்ரங்தள் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பினரும், ஆம்ஆத்மி கட்சி உறுப்பினர்களும், போலீசும் சேர்ந்து ப்ரஸ் க்ளப் அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்தனர். ப்ரஸ் க்ளப்பை முற்றுகையிட்ட ஜனநாயகவிரோதிகள் வரவரராவு உள்ளிட்டோரை தாக்க முயன்றனர். முன்னர் யாஸீன் மாலிக்கை டெல்லியில் கால் பதிக்க அனுமதிக்கமாட்டோம் என்று ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான பஜ்ரங்தள் மிரட்டல் விடுத்திருந்தது. இறுதியில் சங்க்பரிவாரத்திற்கு பயந்து ப்ரஸ் க்ளப் அதிகாரிகள் செய்தியாளர்கள் அனுமதி மறுத்தனர். அதேவேளையில் கஷ்மீரில் இருந்து வந்த 150க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்த அபூ ஃபஸலில் நகீனா ஹவுஸை சுற்றி வளைத்த போலீஸ் யாரையும் வெளிவர அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார். ஒருவிதமாக வெளியேவந்த கஷ்மீரிகள் சாலையில் மறியல் செய்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பிற்கு வந்தவர்களை தேசத்துரோகிகள் என்று அழைத்து அறிக்கை வெளியிட்ட ப்ரஸ் க்ளப் இந்தியாவின் நிர்வாகிகளுக்கு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாடுபடும் சி.ஆர்.பி.பி கண்டனம் தெரிவித்துள்ளது. ஜந்தர் மந்தர், ப்ரஸ் க்ளப் போன்ற இடங்களில் கூட அரசியல் மாற்றுக்கருத்தை தெரிவிக்க முடியாதது துக்ககரமானது என்று வரவரராவ் கூறினார். ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களும் அரசின் செல்வாக்கிற்கு அடிபணிந்து செயல்படுவதாக அவர் கூறினார்.

.thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக