puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

கோவையில் மாவோயிஸ்டு தீவிரவாதி கைது எதிரொலி: வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்கும் பணி தீவிரம்


கோவையில் மாவோயிஸ்டு தீவிரவாதி கைது எதிரொலி: வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்கும் பணி தீவிரம்
கோவை, ஏப். 8- 

மேற்கு வங்காள மாநிலத்தில் 24 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவேயிஸ்டு தீவிரவாதி சியாம்சரன் கோவையில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சியாம்சரன் மாவோயிஸ்டு இயக்கத்தின் ஆயுதப்படை பிரிவில் 2-ம் நிலை கமாண்டராக இருந்தவன். 

கோவையில் கைதான சியாம்சரன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-3) ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். தொழில் நகரமான கோவையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டதால் அவர்களை கோவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பொது மக்கள் போர்க்கொடி தூக்கினர். 

அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதித்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்போர் அவர்களது முழு முகவரி மற்றும் செல்போன் எண்களை வாங்க வேண்டும், அவர்கள் தங்க வைக்கப்பட்ட விவரம் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. 

ஆனால் இந்த நடைமுறைகள் எல்லாம் ஒரு சில நாட்களில் காற்றில் பறந்தன. நடைமுறைகளை வட மாநில தொழிலாளர்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசார் தவறி விட்டனர். அதன் விளைவு 24 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டு தீவிரவாதி பதுங்கியது கூட போலீசுக்கு தெரியாமல் போய்விட்டது. 

மேற்கு வங்காள போலீசார் உரிய நேரத்தில் கண்டுபிடித்து அவனை கைது செய்து விட்டனர். இல்லையென்றால் கோவையிலும் ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. கைதான சியாம்சரனுடன் மேலும் பல மாவோயிஸ்டுகள் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

இது குறித்து சியாம் சரனிடம் விசாரித்தபோது 'மாவோயிஸ்டுகள் யாரும் என்னுடன் வரவில்லை. எனது சொந்த கிராமத்தினர் சிலருடன்தான் கோவை வந்தேன்' என்றான். இருப்பினும் சியாம் சரனின் வாக்குமூலம் போலீசாருக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. அவனுடன் வந்தவர்களை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் யார்? என்பதை அறிய மாநகர காவல் துறையில் 10 தனிப்படையும், புறநகரில் 15 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைத்து வடமாநில தொழிலா ளர்களிடமும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 

விசாரணைக்கு பயந்த தொழிலாளர்கள் நேற்று முதலே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். பெட்டி படுக்கைகளுடன் கோவை ரெயில் நிலையத்துக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். சியாம் சரன் கைது செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வடமாநில தொழிலாளர்களின் ஒவ்வொரு அசைவுகளும் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 

இந்த மாவட்டங்களில் உள்ள பனியன் கம்பெனிகள், நகைப்பட்டறைகள், செங்கல் சூளைகள், நார் தொழிற்சாலைகள், மில்கள், லேத், பவுண்டரிகள் உள்ளிட்ட தொழில் மையங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அவர்களை பற்றிய தகவல்களை அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

வட மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் யார்? யார்? அவர்கள் எங்கிருந்து அழைத்து வரப்படுகிறார்கள்? என்பது பற்றிய தகவல்களையும் அவர்களது பெயர், முகவரி, போட்டோ ஆகியவற்றையும் அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்கள் கொடுக்க வேண்டும் என்றும் வேலை முடிந்து திரும்ப செல்லும்போது அந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் ஏஜெண்டுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல வடமாநிலத்தவர்கள் யாரையாவது வாடகைக்கு வைத்திருந்தால் அவர்களது பெயர், முகவரி பற்றிய தகவல்களை சேக ரித்து அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் கொடுக்க வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த உத்தரவுகள் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் தற்போதும் அமலில் உள்ளது. தற்போது மாவோயிஸ்டு தீவிரவாதி சியாம்சரன் போலீசில் சிக்கியுள்ளதால் இந்த உத்தரவுகளை தீவிரப்படுத்தவும், வடமாநிலத்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பை தீவிரப்படுத்தவும் போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக