puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 15 ஏப்ரல், 2013

உலகப்புகழ் பெற்ற பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு : அதிர்ச்சியில் அமெரிக்கா


உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் பாஸ்டன் மரதன் போட்டிகளின் போது நேற்று மாலை இடம்பெற்ற அடுத்தடுத்த இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் குறைந்தது 2  பேர் கொல்லப்பட்டும், 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இக்குண்டுவெடிப்புக்கான பின்னணி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பாஸ்டன் மரதன் ஓட்டப்போட்டிகள் முடிவடையும் இடத்தில் இரு குண்டுவெடிப்புக்கள் 15 செக்கன் இடைவெளிக்குள் வெடித்துள்ளன.

மூன்றாவதும் ஒரு குண்டு அந்நகர நூலகத்தில் வெடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள போதும் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னுமொரு குண்டு வெடிக்க முன்னர் செயலிழக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இக்குண்டுவெடிப்புக்களை அடுத்து, பொதுமக்களை தங்களது வீடுகளிலேயே இருக்குமாறும் பெருமளவில் ஒரே இடத்தில் வெளியில் ஒன்றுகூடுவதை தற்போதைக்கு தவிர்த்துக்கொள்ளுமாறும் நகர காவல்துறை கமிஷினர் அறிவுறுத்தியுள்ளார்.

மச்சாசுவெட்ஸ் மருத்துவமனை தகவல்களின் படி, 19 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது கால்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடென் ஆகியோர் உடனடியாக பாஸ்டன் நகர ஆளுனர் டாம் மெனினோ மற்றும் மசாவெட்ஸ் ஆளுனர் டெவல் பட்ரிக்குடன் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு நிலமைகளை கேட்டறிந்துள்ளனர்.

குறித்த பாஸ்டன் பகுதியின் மேலாக விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புடன் தொடர்புடையாதாக சந்தேக நபர்  ஒருவர் கைவிலங்குடன் காவல்துறையினர் வெள்ளை வானில் அழைத்து சென்றிருப்பதையும் ஒரு சிலர் அவதானித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் ஊடாக படம்பிடிக்கப்பட்ட தொலைக்காட்சி பதிவுகளின் படி குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடம் மரதன் ஓட்டப்போட்டி முடிவடையும் எல்லையின் அருகில்  பாதசாரிகள் நடைபாதையில் உள்ள Back Bay  என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலகின் மிகப்ழமையான வரலாற்றைக்கொண்ட மரதன் ஓட்டப்போட்டிகள் பாஸ்டன் நிகழ்வுகள் ஆகும். இம்முறை 117 வது மரதன் போட்டிகள் நடைபெற்று வந்தன.
அமெரிக்காவின் சூப்பர் பாவ்ல் விளையாட்டு போட்டிகளுக்கு அடுத்து அதிக ஊடக கவனம் பெறும் விளையாட்டு நிகழ்வாகும் இதுவாகும். இவ்வருடம் 28,000 போட்டியாளர்கள் சுமார் 90 நாடுகளிலிருந்து வருகை தந்து இப்போட்டியில் கலந்து கொண்டனர். சுமார் 500,000 பார்வையாளர்கள் இப்போட்டிகளை வருடந்தோறும் கண்டுகளிப்பது வழக்கம்.

கடந்த 25 வருடங்களில், 23 தடவை கென்யா அல்லது எதியோப்பிய வீரர்களே இப்போட்டிகளில் வென்றுள்ளனர். இக்குண்டுவெடிப்பு ஒரு வேளை தீவிரவாத தாக்குதலாக இருந்தால், பெருமளவிலான மக்கள் இங்கு ஒன்று கூடுவார்கள் என தெரிந்தே திட்டமிட்டு இக்குண்டுவெடிப்பை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது.
Video : Boston Globe

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக