puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பெங்களூர்:சமையல் எரிவாயு டாங்கர் லொறி விபத்தில் 6 பேர் பலி

[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 02:38.02 AM GMT +05:30 ]
மங்களூர் அருகே குத்தத்தூர் கிராமத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் இருந்து நேற்று காலை சமையல் எரி வாயு நிரப்பிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி பெங்களூருக்கு புறப்பட்டது.
திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து சமையல் எரி வாயு கசிந்ததால் தீப்பிடித்தது. இந்த தீ சாலையோரத்தில் இருந்த 6 வீடுகளுக்கும் பரவியதோடு சாலையில் நின்று கொண்டு இருந்த ஒரு கார், ஒரு மினி லாரி, ஒரு ஸ்கூட்டரும் தீப்பிடித்து எரிந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள தென்னை மரங்கள் உள்பட பல மரங்களும் தீப்பிடித்து எரிந்தன. 

இந்த பயங்கர விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகி இறந்ததோடு சாலையோரம் இருந்த வீடுகளில் பிடித்த தீயில் ஷோபா(35), சலீம்(15), நாராயணா, அவரது மனைவி ஆகிய 4 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்த பகுதி முழுவதும் கியாஸ் நெடி வீசியது. 

தகவல் அறிந்ததும் உப்பினங்கடி மற்றும் புத்தூர் பகுதிகளில் இருந்து 13 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இதுகுறித்து உப்பினங்கடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். உடல் கருகி இறந்த லாரி டிரைவர், கிளீனர் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவத்தால் மங்களூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையான நின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக