puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 13 மார்ச், 2013

நெஞ்சம் மறப்பதில்லை ....!


நெஞ்சம் மறப்பதில்லை ....!

"நான் இ.பி.கோ.-விற்கு பயப்படவில்லை. ப.பி.கோ.-விற்கு பயப்படுகின்றேன். அதாவது 'பகவான் பிரசிஜர் கோட்'-க்கு பயப்படுகின்றேன்." - கவிஞர்  கண்ணதாசன்.

தனது புத்தகம் ஒன்றில் கவியரசு எழுதிய இந்த வரிகளை முன் எப்போதோ படித்த நியாபகம். எவ்வளவு ஆழமான சிந்தனை, வேடிக்கையான வார்த்தை ஜாலங்களில்.

ப.பி.கோ.-விற்கு பயப்பட்டு விட்டால், பிறகு நாட்டில் இ.பி.கோ., சி.பி.கோ., (சிவில் பிரசிஜர் கோட்), சிஆர். பி.கோ. (கிரிமினல் பிரசிஜர் கோட்) ஆகிய சட்டங்களுக்கு வேலை இல்லை என்பது உண்மைதானே ?

எல்லாவிதமான உணர்வுகளையும் தனது பாடல்களில் காட்டியவர் கண்ணதாசன். அவரது பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படங்கள் எத்தனையோ? உடலை வருடும் தென்றல் காற்றாய் மனதை தழுவும் அவரது மெல்லிசை பாடல் வரிகளை இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆயிரம் அர்த்தங்கள் அவற்றில் மென்மையாக உறங்கிக் கொண்டிருக்கும்.

"நெஞ்சில் ஒரு ஆலயம்" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மிக அருமையான பாடல் வரிகளை பாருங்கள்,-

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை;
நடந்ததையே நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை.
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே;
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே."

நமது வாழ்வில் நினைப்பது எல்லாமே நடந்து விடுகின்றதா..? சத்தியமாக கிடையாது. ஏதோ "காக்கை உட்கார பனம் பழம் விழுந்து விட்டால்"உடனே "நான் அப்போவே சொன்னேனில்லே .... இது நடந்தே தீருமின்னு" என்று மார் தட்டிக் கொள்கின்றோம். நடக்காது போனால்,"சாமி எப்படியாவது முடிச்சு வையப்பா .." என்று கடவுளிடம் கற்பூரம் காட்டுகின்றோம். அதுபோல  முடிந்து போன கசப்பான, வேதனையான நிகழ்வுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், அடுத்து ஆக வேண்டியதை யார் பார்ப்பது? நாம்தானே பார்த்தாக வேண்டும் ? மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே செயல் சரியாக நடைபெறும்.

தொடர்ந்து வரும் பாடல் வரிகளில், "வாழ்வில் நாளை நடப்பது உனக்கு தெரியுமா ?" என்றொரு கேள்வியை கேட்டு பதிலும் சொல்கின்றார் கவிஞர்.

"எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை... இதுதான் பயணம்...என்பது யாருக்கும் தெரியாது.
பாதையெல்லாம் மாறிவரும்; பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து விடும்"

இதோ அந்தப் பாடலை உங்களுக்காக போடுகின்றேன். எத்தனை முறை கேட்டிருந்தாலும் மீண்டும் ஒரு முறை கேட்டு சாந்தமடையுங்கள்.


சில சமயம் நமக்கு ஏற்படும் இழப்புகள் மிகப் பெரிதாக இருக்கும். நம்மை நிறையவே தாக்கி இருக்கும். அதை இலகுவாக எடுத்துக் கொள்ள கவிஞர் கண்ணதாசன் 'பாலும் பழமும்' படத்தில் அருமையான வரிகளை தருகிறார்.



"பாத கணிக்கை"-யில்,

யாரெல்லாம் எது வரை வருவார்கள் 
என்று அருமையான விளக்கம் கூறி விட்டு,

"சென்றவனை கேட்டால், 
வந்து விடு என்பான். 
வந்தவனைக் கேட்டால் 
சென்று விடு என்பான்"

என்ற வரிகள் எவ்வளவு சிந்திக்க வைக்கின்றன.


இப்படி எத்தனையோ பாடல்கள். எல்லாம் சொல்ல ஒரு பதிவு போதாது ! 


sattaparvai. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக