puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 4 மார்ச், 2013

பணத்துக்கும், எருமைக்கும் மணப்பெண்கள் விற்பனை!


பணத்துக்கும், எருமைக்கும் மணப்பெண்கள் விற்பனை!
March 4, 2013  01:57 pm
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் மணப்பெண்களை பணத்தையும், எருமை மாட்டையும் கொடுத்து விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குள்ள அசோக்நகர், குனா போன்ற மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை காரணமாக, பெண்களின் விகிதாச்சாரம் குறைந்து ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண்கள் கிடைப்பது அரிதாகி விட்டது.

நீண்ட நாட்களாக பெண் கிடைக்காத காரணத்தால் அலையோ அலை என்று அலைந்து கடைசியில் பெண்ணை காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் மணமகன்கள்.

வரதட்சணை கொடுக்க தடுமாறும் பெற்றோர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொன்று விடுகின்றனர். சிலர் கருவிலேயே அழித்துவிடுகின்றனர்.

மத்திய பிரதேசமாநிலத்தில் சில மாவட்டங்களில் இந்த கொடுமை அதிகம் நடைபெறுகிறது.

ஆண் குழந்தைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துவிட்டதால் மணப்பருவத்தில் நிற்கும் பல ஆண்களுக்கு தற்போது மணப்பெண்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பெண் கிடைக்காமல் தடுமாறும் மணமகன் வீட்டார் இடைத்தரகர்களை நாடுகின்றனர். அந்த இடைத்தரகர்களுக்கு ஆள் கடத்தும் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதால் பெண்களை கடத்தி வந்து மணமுடித்து வைக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து மணமகளை விற்பனை செய்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 14 முதல் 16வயது வரையான 3 பேரை கடத்தி மத்திய பிரதேசத்தில் ரூ35 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை விற்றுள்ளனர்.

ரூ50 ஆயிரத்துக்கு விற்பனை செய்த பெண்ணுக்கு தரகர்கள் நிர்ணயித்த தொகை ரூ75 ஆயிரம். அந்த அளவுக்கு மணமகனிடம் பணம் இல்லாததால் ரூ25 ஆயிரத்துக்கு பதிலாக எருமையை பெற்றுக் கொண்டு பெண்ணை விற்றுள்ளனர். 

பெண்களை காணவில்லை என்ற புகாரின் பேரில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்ட பொலிசார் மத்திய பிரதேசம் சென்று அந்த பெண்களை மீட்டனர்.

வறுமை, போதுமான விழிப்புணர்ச்சி இல்லாமை காரணமாக பாதிக்கப்படும் பெண்களும் அவர்களது குடும்பத்தாரும் பொலிசில் புகார்கள் அளிப்பதில்லை. விற்பனை செய்யப்படும் பெண்களை வாங்கும் மணமகன் அந்த பெண்ணை மனைவியாக்கி கொள்வதால் அந்த பெண்கள் புகார் தர தயங்குகின்றனர். இதனால், பொலிசாருக்கு இதுபோன்ற குற்றங்களை தடுப்பது கடினமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

.thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக