- Monday, 04 March 2013 12:03
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அமெரிக்க கல்லூரி ஒன்றுக்கு வீடியோ கான்பரன்சிங்கில் உரை நிகழ்த்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனினும் அக்கல்லூரி தற்போது அதை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரம் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் Wharton Business School எனும் கல்லூரி மாணவர்களுக்கு உரை நிகழ்த்த இருந்தார். எனினும் தமது கல்லூரின் பழையமாணவர்கள், மாணவ அமைப்புக்கள், தமது ஆதரவாளர்கள் அனைவரும் மோடியை தவிர்ப்பதற்கே தற்போது முடிவெடுத்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, மோடியின் குறித்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
மோடிக்கு பதில் வேறு இந்திய தலைவர்களில் யாராவது ஒருவர் உரையாற்றலாம் என்றும் தெரிய வருகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தேசிய செயல்லாளர் ராஜா, பெரும் வரவேற்பு அளித்துள்ளார். பாஜகவின் இந்த மதவாத போக்கை அமெரிக்க கல்லூரி நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது என்றும், மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட குஜராத் மதவாத கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கையே இதற்கு சாட்சி என்றும் கூறியுள்ளார்.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக கூட சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
2001 குஜராத் கலவரத்தில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதிலிருந்து இன்று வரை மோடிக்கு அமெரிக்கா சென்றுவர விசா வழங்கப்படவில்லை. முஸ்லீம்கள் மீதான தாக்குதலை அவர் தடுக்க தவறிவிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும். எனினும் கடந்த வருடம் டிசம்பர் மாதம், மோடி குஜராத்தின் முதல்வராக மூன்றாவது முறை அமோக வெற்றியிட்டியதை அடுத்து, 2014 சட்டமன்ற தேர்தலில் மோடியே பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது. அதோடு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் மோடியை சந்தித்த போது, மோடி மீதான தடைகளை நீக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
news 4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக