மும்பை தாதர் பகுதியில் உள்ள ஆண்டோனியோ டிசில்வா பள்ளியில் பயிலும் 6 வயது மாணவர்கள் மூன்று பேர் வகுப்பில் சரியாக நடந்துகொள்ளவில்லை என்பதற்காக, மைதானத்தை சுற்றி வரும் தண்டனையையும், கழிப்பறையை தூய்மைப் படுத்தும் தண்டனையையும் ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர்.
இத்தண்டனையால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவன், பித்துப் பிடித்த நிலையில் வீட்டில் இருந்துள்ளான். அவனிடம் பெற்றோர் தீவிரமாக விசாரித்ததில், பள்ளியில் நடந்ததைச் சொல்லியிருக்கிறான். அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர், உடனடியாக பள்ளிக்குச் சென்று வசாரித்துள்ளனர். அதற்கு சரியான விளக்கத்தை பள்ளி நிர்வாகம் அளிக்காததால், போலீசாரிடம் புகார் அளித்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பள்ளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
tamil.webdunia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக