puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 23 மார்ச், 2013

கார் இறக்குமதியில் ரூ.500 கோடி மோசடி: முக்கிய குற்றவாளியை பிடிக்க சி.பி.ஐ. தீவிரம்


 March 23, 2013   

கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப். இவர் வெளிநாடுகளில் இருந்து விலை மதிப்புமிக்க அதிநவீன சொகுசு கார்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர் – நடிகைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும்போது கார் மதிப்புக்கு 3 மடங்கு அதிகமாக சுங்க வரி கட்ட வேண்டும் என்று விதி உள்ளது. அதாவது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கார் வாங்கும் பட்சத்தில் ரூ.3 கோடி வரி கட்ட வேண்டியதிருக்கும். ஆனால் அலெக்ஸ் ஜோசப் வருவாய் துறை அதிகாரிகள் உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து, வெளிநாட்டு கார்கள் இறக்குமதியில் பெரியஅளவில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

வருவாய் புலனாய்வுத் துறையினர் இதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு அலெக்ஸ் ஜோசப் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே கடந்த 13 ஆண்டுகளில் சுமார் 450 வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்துள்ள அலெக்ஸ் ஜோசப் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். இந்த நிலையில் ஜாமீன் பெற்று வெளியில் வந்திருந்த அலெக்ஸ் ஜோசப், சி.பி.ஐ.யிடம் பிடிபடாமல் இருக்க தலைமறைவாகி விட்டார். இவருக்கு டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்பட முக்கிய நகரங்களில் வீடுகளும், அலுவலகங்களும் உள்ளன.
இந்தியாவின் முன்னணி தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகளிடம் நெருக்கமாக பழகி வந்த அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அலெக்ஸ் ஜோசப்பின் வீடுகள், அலுவலகங்களில் ஏற்கனவே சோதனையை நடத்தி முடித்து விட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோதுதான், வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்ததில் அலெக்ஸ் ஜோசப் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் அலெக்ஸ் ஜோசப்பிடம் குறைந்த விலைக்கு கார்கள் வாங்கிய பிரபலங்கள் பற்றிய விபரங்களும் கண்டுபிடித்தது.
இதையடுத்து அலெக்ஸ் ஜோசப்பிடம் வெளிநாட்டு கார்கள் வாங்கிய வி.ஐ.பி.க்கள் பட்டியலை சி.பி.ஐ. தயாரித்தது. அந்த பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினால் கார் இறக்குமதியில் எந்த அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்பதை உறுதிபடுத்த முடியும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அலெக்ஸ் ஜோசப்பிடம் சட்டவிரோதமாக வெளி நாட்டு கார் வாங்கியவர்களிடம் 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை விசாரணை நடத்த சி.பி.ஐ. தீர்மானித்தது. அதன்படி கடந்த புதன்கிழமை முதல் நாடெங்கும் சி.பி.ஐ. அதிரடி சோதனையில் ஈடுபட்டது. தமிழ்நாட்டிலும் சென்னை உள்பட சில இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
நேற்று முன்தினம் அவர்கள் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், வீட்டுக்கு சென்று விசாரணை நடத்திய போது பெரும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்டு விட்டது. காங்கிரஸ் தூண்டுதலின் பேரில், சி.பி.ஐ. இந்த சோதனையையும், விசாரணையையும் நடத்தியதாக நாடெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. என்றாலும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டப்படி தங்களது விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் கடந்த 2 நாட்களாக வி.ஐ.பி.க்களிடம் உள்ள வெளி நாட்டு கார்கள் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதோடு வெளிநாட்டு கார்களை பறிமுதல் செய்தனர். இதுவரை பல்வேறு பிரபலங்களிடம் இருந்து 33 வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 16 வெளிநாட்டு கார்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே பறிமுதல் செய்த வெளி நாட்டு கார்களில் பெரும்பாலானவற்றை அவற்றின் உரிமையாளர்களிடம் சி.பி.ஐ. திருப்பி ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோர்ட்டில் விசாரணை நடக்கும்போது கார்களை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கார்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு கார்கள் இறக்குமதியில் வரி ஏய்ப்பு முறைகேடுகளில் நடத்திருப்பது அம்பலமாகி உள்ள நிலையில், அதற்கு காரணமான முக்கிய குற்றவாளியான அலெக்ஸ் ஜோசப் பிடிபட்டால்தான் இந்த வழக்கின் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. எனவே அலெக்ஸ் ஜோசப்பை கைது செய்ய நாடெங்கும் சி.பி.ஐ. வலை விரித்துள்ளது. ஆனால் அலெக்ஸ் ஜோசப் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் டெல்லியில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று அலெக்ஸ் மனைவி சரிதாவிடம் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் அலெக்ஸ் வி.ஐ.பி. ஒருவர் மூலம் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அலெக்ஸ் ஜோசப் வேறு, வேறு பெயர்களில் வெளிநாடுகளுக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பேபி ஜான் என்ற பெயரில் அவர் வெளிநாட்டுக்கு சென்றது தெரியவந்துள்ளது. மீண்டும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அலெக்ஸ் ஜோசப்பை தேடப்படும் குற்றவாளியாக சி.பி.ஐ. அறிவிக்க திட்டமிட்டுள்ளது. அவரது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லியில் அவர் வீட்டில் இருந்து 4 1/2 கோடி ரூபாய் மதிப்புக்கு பல சொத்து ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை கையகப்படுத்த சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது.

news.tamilstar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக