puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 1 மார்ச், 2013

தெரிந்து கொள்வோம் வாங்க-39


 
* சீனா தலைநகர் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் "சீங்பாவோ' என்ற பத்திரிகை 103 ஆண்டுகளாக வெளிவருகிறது. அச்சு இயந்திரம் வருவதற்கு முன் இதைக் கையால் எழுதி நகல் எடுத்தார்களாம்.

* உலகிலேயே முதன்முதலில் தலைப்புடன் செய்தி வந்தது 1777-ம் ஆண்டில் "நியூயார்க் கெஜட்' என்ற பத்திரிகையில்.

*உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் முதல் கோலைப் போட்டவர் என்ற பெருமை பிரான்ஸ் நாட்டு அணியைச் சேர்ந்த லூசியனண்ட் லூரான் என்ற வீரர் பெற்றார். 1930-ம் ஆண்டு முதல் கோலை மெக்ஸிகோவிற்கு எதிராகப் போட்டார்.

* தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில் வெளிவந்த வார இதழ் பத்திரிகை 12.10.1785-ம் ஆண்டு வெளியான "மெட்ராஸ் கொரியர்' என்னும் வார இதழ் தான். இதன் ஆசிரியர் ரிச்சர்ட் ஜான்சன்.

* 1841-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "ஜனசிநேகிதன்' என்ற இதழ்தான் தமிழில் வெளியான முதல் மாதமிருமுறை இதழ்.

* இந்தியில் வெளியான முதல் பெண்கள் பத்திரிகை "சுக்ரினி'. இதை வெளியிட்டவர் ஹேமந்த் குமாரி என்ற வங்காளப் பெண்.

* இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1854 மே 6-ம் தேதி. அன்றைய கமிஷனர் பென்னி பிளாக் என்பவரால் வெளியிடப்பட்டது.

*எவரெஸ்ட் சிகரத்திற்கு 1865-ம் ஆண்டில் தான் அப்பெயர் வந்தது. அதற்கு முன்பு சிகரம்-15 என்னும் பெயர் தான் வழங்கப்பட்டது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த நேரம், இந்தியாவில் எவரெஸ்ட் என்பவர் சர்வேயர் ஜெனரலாக இருந்தார். அவர் இமயமலைத் தொடரில் உள்ள சிகரங்களுள் சிகரம்-15 தான் உயரமான சிகரம் எனக் கண்டறிந்தார். அதனால், அவர் பெயரையே அந்த சிகரத்திற்கு சூட்டிவிட்டனர்

* ஒரு புற்றிலுள்ள எறும்பு அடுத்த புற்றில் நுழைவதில்லை.

* தலை துண்டிக்கப்பட்டாலும் எறும்புகள் 20 நாட்கள் உயிருடன் இருக்குமாம்.

* வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து 106 நாட்கள் வரை உயிர் வாழுமாம்.

* ஒரு வாரம் வரை நீருக்கடியில் உயிருடன் வாழும்.

* சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் உள்ளது.

* கி.மு.13-ம் நூற்றாண்டிலேயே சீனாவில் குடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

* உலகில் 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்

*சாலையோர உணவு விடுதி யாரால், எப்போது தொடங்கி வைக்கப்பட்டது? -ஆர்தர் ஹெய்ன்மென் (1925-ம் ஆண்டு)

*நீருக்கடியில் தங்குமிடத்தைக் கட்டிய முதல் நாடு? - சுவீடன்

*உலகின் மிகப் பழமையான தங்கும் விடுதியின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் கட்டப்பட்டது? -ஹோசி ரியாகோன், ஜப்பான்.

*தனது வாழ்நாளை தங்கும் விடுதியிலேயே கழித்த அமெரிக்க கோடீஸ்வரர்? -ஹோவர்ட் ஹக்ஸ்

*உலகின் மிகப்பெரிய தங்கும் விடுதி? -பர்ஜ் அல்-அராப்

*அதிகமான அறைகளைக் கொண்ட மிகப்பெரிய தங்கும் விடுதி எந்த நகரில் உள்ளது? -பர்ஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல்(அமெரிக்கா)

*அமேசான் காடுகளுக்குள் அமைந்த ஹோட்டலின் பெயர்? -அரிஸ் டவர்ஸ்

*உலகிலேயே மிகவும் சிறந்த உணவகம் ? -எல் புல்லி (ஸ்பெயின்)

*அமெரிக்காவிலேயே முதலிடத்தில் இருக்கும் உணவகம்?-பெர் சி

*தி பேட் டக் என்பது எந்த நாட்டின் பிரபல உணவகம்? -இங்கிலாந்து

*பாஸ்தா என்பது எந்த நாட்டின் பிரபல உணவு? - இத்தாலி.

*சால்சா என்ற உணவு எந்த நாட்டில் மிகவும் பிரபலமானது? -மெக்சிகோ

*தென்னிந்தியர்கள் காலை உணவாக அதிகம் சாப்பிடுவது? -இட்லி

*காலை உணவில் சாக்லெட்டை அதிகம் சேர்த்துக் கொள்ளும் ஐரோப்பிய நாட்டவர்? -ஸ்பெயின்
நன்றி: யாழ் இணையம்

சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு!சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு வந்த பின் வேலை மற்றும் சம்பளம் பிரச்சனை காரணமாக
கம்பெனியை விட்டு ஓடிப்போய் வேலைபார்த்தவர்கள் அல்லது எதோ ஒரு காரணமாக ஹூரூப் எனும் சட்டத்தின் கீழ் உங்கள் மீதோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் அருகில் இருப்பவர்கள் மீது இந்த குற்றம் சாட்டப்பட்டு ஊருக்குப் போக முடியாமல் இருப்பவர்களா?

உடனே இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். இந்த ஹூரூப் சட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு உதவிட இந்திய அரசு சவூதி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுங்கள்

தகவல்: ஆதம் அபுல்ஹசன்
செய்தித் தொடர்பாளர்,
தஃபர்ரஜ் - ரியாத்


சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு!சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு வந்த பின் வேலை மற்றும் சம்பளம் பிரச்சனை காரணமாக
கம்பெனியை விட்டு ஓடிப்போய் வேலைபார்த்தவர்கள் அல்லது எதோ ஒரு காரணமாக ஹூரூப் எனும் சட்டத்தின் கீழ் உங்கள் மீதோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் அருகில் இருப்பவர்கள் மீது இந்த குற்றம் சாட்டப்பட்டு ஊருக்குப் போக முடியாமல் இருப்பவர்களா?

உடனே இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். இந்த ஹூரூப் சட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு உதவிட இந்திய அரசு சவூதி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுங்கள்

தகவல்: ஆதம் அபுல்ஹசன்
செய்தித் தொடர்பாளர்,
தஃபர்ரஜ் - ரியாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக