puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 27 பிப்ரவரி, 2013

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு



Wednesday, 27 February 2013 19:45 administrator

E-mail Print PDF
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தக் கோரி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் 29 வது நாளாக தொட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னை கடற்கரையில் உள்ள காந்தியடிகள் சிலை அருகே அவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். காவல்துறையினர் அவரை கைதுச் செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறைக்குள்ளும் அவர் தனது தொடர்ச்சியான போராட்டத்தைத் தொடர்ந்தார். இவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று அவரை விடுதலைச் செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழுவில் தீர்மானம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் சசி பெருமாளின் விருப்பத்திற்கு மாறாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  
  விடுவிக்கப்பட்ட போதினும் அவர் தொடர்ந்து தனது உண்ணாநிலைப் போராட்டத்தை காந்தியடிகள் சிலை அருகே மீண்டும் தொடர்ந்தார். இந்நிலையில்  காவல்துறையினர் அவரை கைதுச் செய்து அரசு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர் மைலாப்பூரில் உள்ள தியாகி நெல்லை ஜெபமணி வீட்டில் தனது தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிறார். இச்சூழலில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று (பிப்ரவரி 27) காலை மைலாப்பூரில்மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி உண்ணாநிலைப்போராட்டம் நடத்தி வரும் சசி பெருமாளைச் சந்தித்தார். உண்ணாநிலையுடன் மவுன விரதமும் மேற்கொண்டுள்ள சசி பெருமாள் பேராசிரியரைப் பார்த்தவுடன் புன்முறுவலுடன் அவரை வரவேற்றத்துடன் நீங்கள் எனக்கு ஆதரவாக வருகை தந்தது எனது போராட்டம் வெற்றிப் பெற பெரிதும் உதவிடும் என்று எழுதி காண்பித்தார். சேலத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மதுவிலக்கு பிரச்சாரத்தின் போது தான் பங்குக் கொண்டது குறித்தும் மது ஆலை முற்றுகைப் போராட்டத்தில் பங்குக் கொண்டு கைதானதையும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி நீங்கள் தொடர்ச்சியாக உடலை வருத்தி போராடுவது ஒரு உன்னத போராட்டமாக இருந்த போதினும் உங்களைப் போன்றோர் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய தேவை என்பதால் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியதாவது: காந்தியவாதி சசி பெருமாள் தொடர்ந்து

40 ஆண்டுகளுக்கு மேலாக மதுவிற்கு எதிராக போராடி வருபவர். அவர் தொடர்ச்சியாக 29 நாட்கள் தமிழகத்தில் உள்ள மது கடைகளை மூட வலியுறுத்தி நடத்தி வரும் போராட்டம் ஒரு உன்னதமான போராட்டமாகும். தமிழகத்தில் இன்று திமுக அதிமுக தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தான் சசி பெருமாளின்போராட்டம் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக அவர் உயிரை துச்சமாக எண்ணி இப்போராட்டத்தை நடத்தினாலும் தமிழக அரசு பாராமுகமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் உணர்வுகளின் பிரதிப்பலிப்பாக நடைபெறும் இப்போராட்டத்திற்கு மதிப்பு அளித்து தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை உடனடியாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். சசி பெருமாள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார;. தமுமுக துணைத்தலைவர் குணங்குடி அனிபாவும் சசி பெருமாளை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மைலாப்பூர் பகுதி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜரூக்அலி தலைமையில் அப்பகுதி நிர்வாகிகள்மற்றும் தொண்டர்கள் ஏராளமாக பங்குக்கொண்டனர்.

Last Updated ( Wednesday, 27 February 2013 21:21 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக