puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 27 பிப்ரவரி, 2013

மலேசிய - இலங்கை தூதரகத்தை மூடக்கோரி முற்றுகைப் போராட்டம்


மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும் என கோரி அரசு சாரா அமைப்புகள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரும்புச் சங்கிலியால் இலங்கை தூதரகத்தின் முன் புற இரும்புக் கதவைப் பூட்ட முயன்றனர்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் அவர்களைத் தடுக்க முயன்ற போது இரண்டு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலைவியது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டதாக வெளியான செய்தி உலகம் முழுமையும் உள்ள தமிழர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கோலாலம்பூரில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற அமைப்புகள் பாலச்சந்திரன் படுகொலை சம்பவத்திற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்க வேண்டும் என கோரி இலங்கை தூதரகத்திற்கு முன் முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.
தமிழர் பணிப்படை குழுவின் செயலவை உறுப்பினர் பூச்சோங் முரளி, சுங்கைவே சாமி, தமிழன் உதவும் கரங்கள் முரளி, பேரின்பம் தலைவர் யு.தாமோதரன், மலேசிய தமிழ் மாணவர்கள் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் கலைமுகிலன், பேரின்பம் துணைத் தலைவர் ராஜேந்திரன், கோலாலம்பூர்-சிலாங்கூர் வாசகர் இயக்கத்தின் தலைவர் அம்பாங் சுப்ரா, உலக தமிழர் மாமன்ற தலைவர் எம்.ஆர்.எஸ்.வீரா, உலக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் செயலவை உறுப்பினர் பொன்ரங்கன் ஆகியோர் தலைமையில் சுமார் 100 பேர் 12.30 மணிக்கு ஜாலான் அம்பாங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் திரண்டனர்.
பாலச்சந்திரன் படுகொலை தொடர்பில் ராஜபக்சே நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோலாலம்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட வேண்டும் எனவும் முழக்கமிட்ட அவர்கள் இரும்புச் சங்கிலியால் தூதரகத்தின் முன் வாசல் கதவை பூட்டுவதற்கு முயன்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்கள் மூவரை கைது செய்தனர். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இலங்கை தூதரகத்தில் இருந்து எந்த அதிகாரியும் வெளியே வரவில்லை. அதன் பிறகு அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி பணித்தனர்.
பிற்பகல் 1 மணியளவில் கைது செய்யப்பட்ட மூவர் விடுவிக்கப்பட்ட பின்னர், அங்கு திரண்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர். இலங்கையில் இனப்படு கோலை நடந்திருப்பதை பாலசந்திரனின் கொலை சம்பவம் தக்க சான்றாக அமைந்திருக்கிறது என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பூச்சோங் முரளி, யு.தாமோதரன், தமிழன் உதவும் கரங்கள் முரளி, சுங்கைவே சாமி, பிகேஆர் சுரேஷ், மைக்கல், பொன்ரங்கன் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது உலக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக அமைந்திருக்கின்றது. இந்த இன அழிப்புக்கு காரணமான ராஜபக்சே நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரையில் எங்களுடைய போராட்டம் ஓயாது என்று முரளி குறிப்பிட்டார்.
4தமிழ்மீடியாவிற்காக : மலேசியாவிலிருந்து இளவரசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக