puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் வந்து வழிப்பறி...அச்சம் பெண்களை குறிவைக்கும் நூதன திருடர்கள்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக நவீன யுத்தியை பயன்படுத்தி தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் ஒரு கும்பல் தொடர்ந்து கைவரிசையை காட்டி வருகிறது. நகைகளை பறிகொடுக்கும் பெண்கள், புகார் தெரிவித்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். வங்கிகளில் இருந்து பணத்துடன் வெளியே வருவோரை நோட்டமிட்டு, சட்டையில் அசிங்கம் ஏற்பட்டுள்ளது என, கூறி நூதன முறையில் திருட்டு சம்பவங்கள் நடந்தது. சமீப காலமாக இந்நிலை மாறி நகை கடைகளில் நகைகள் வாங்குவது போல் சென்று திருடுவது,
நகைகடையில் நுழைவு குறித்து நோட்டமிட்டு திருடுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இது ஒருபுறமிருக்க, தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறி நடத்தும் செயல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. சில இடங்களில் பெண்கள் வழிப்பறி திருடர்களிடம் போராடி தங்களது நகைகளை காப்பாற்றிய சம்பவங்களும் அறங்கேறியுள்ளது. ஆனால், இதுபோன்ற சம்பவத்தில் நகை பறிபோகாததால் வழக்குபதிவு செய்வதில்லை. இந்த சம்பவங்களை உதாரணமாக கொண்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தினால் ஒரளவு வழிப்பறி திருடர்களுக்கு அச்சம் ஏற்படும். ரோந்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வழிப்பறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், பட்டணம்காத்தான் "செக்போஸ்ட்' அருகே ஒரு பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர் முகவரி கேட்பது போல் ஆறரை பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதேபோல், நேற்று முன்தினம் கம்பம் கூடலுரை சேர்ந்த கார்மேகம் மனைவி சத்யா, 30. இவர், அரண்மனை அருகே ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவிட்டு வைசியால் வீதியில் நடந்து சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வாகனத்தின் "ஹெட் லைட்டை' அனைத்தவாறு ஓட்டிவந்து சத்யாவின் கழுத்தில் இருந்த எட்டு பவுன் செயினை பறித்து சென்றுவிட்டனர். பொதுவாக வழிப்பறியில் ஈடுபடுவோர் இரு சக்கர வாகனத்தில் லைட் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் வாகனத்தின் லைட்டை அனைத்தும், முகவரி விசாரிப்பது போலும் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற நவீன யுக்தியை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பெண்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் டி.எஸ்.பி., முரளிதரன் கூறியதாவது: வழிப்பறி திருட்டு சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை பிடிக்கவில்லை. இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.


 newsdinamalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக