- Monday, 14 January 2013 08:43

டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர் இவைகளின் விலையை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் உயர்த்தி அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்றபடி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் இவைகைளின் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து வருவது இவ்வேளை குறிப்பிடத் தக்கது.
எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டபடி, பெட்ரோல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், அதோடு டீசல் இவைகளின் விலையை உயர்த்தி அறிவிப்பது என்றும், எப்படி, எவ்வளவு என்பதைப் பற்றி பிரதமர் மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
அதோடு எரிபோருட்களை மான்ய விலையில் வழங்குவதை விடுத்து, அந்த மாநிங்களில் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல் படுத்தவும் நிதி அமைச்சருடன், பிரதமர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னராகவே விலை உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு விட வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காண்பித்து வருகிறது.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக