Wednesday, 02 January 2013 10:16

மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு அண்மையில் கட்சி தாவியிருந்த நாஞ்சில் சம்பத்திற்கு பிரதியுபகாரமாக அவர் மீது போடப்பட்டிருந்த 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதாக அதிமுக அறிவித்து நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளது.
மதிமுகவில் கொள்கை விளக்க அணி செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அண்மையில் அதிமுகவுடன் இணைந்து கொண்டார். உடனடியாக அவருக்கு அதிமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவியை வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெறுமதி வாய்ந்த இனோவா கார் ஒன்றையும் பரிசளித்தார்.
இந்நிலையிலேயே தற்போது சம்பத் மீது போடப்பட்ட 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகந்த் மீதும், திமுகவின் முக்கிய கட்சித்தலைவர்கள் பலர் மீதும் அதிமுக தொடர்ச்சியாக அவதூறு வழக்குகளை பதிவு செய்து வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் மீதான இக்கரிசணை பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக