puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 5 ஜனவரி, 2013

பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட போது உதவ யாரும் முன்வரவில்லை : மாணவியின் நண்பர்




பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்ட இரு மணி நேரத்திற்கு எமக்கு உதவி செய்ய ஒருவரும் வரவில்லை என  டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் நண்பர் தெரிவித்துள்ளார்.
இப்பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ஒரே ஒரு சாட்சியாளரும்,  குறித்த சம்பவத்தின் போது பேருந்தில் அப்பெண்ணுடன் பயணித்த அவரது நண்பருமான நபர் Zee தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியின் போது இதனை தெரிவித்தார்.

'டிச.16ம் திகதி அச்சம்பவம் நடைபெற்ற போது, நாம் பேருந்திலிருந்து தூக்கிவீசப்பட்டு தெருவில் போராடிக்கொண்டிருந்தோம். நிர்வாணமாக இருந்த எங்களுக்கு உடை கொடுப்பதற்கோ அல்லது ஆம்புலன்ஸை அழைப்பதற்கோ ஒருவரும் முன்வரவில்லை. தெருவில் வெறுமெனே எம்மை வேடிக்கை பார்த்து சென்றார்கள். சில ரிக்க்ஷாக்கள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன தமது வேகத்தை சற்று குறைத்தன. ஆனால் ஒருவருமே நிறுத்தவில்லை. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் சிலரே காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர்.

3 PCR வேன்களுடன் 45 நிமிடம் கழித்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தனர்.  அங்கு தெருவில் வைத்து சட்டரீதியான சிக்கல்கள் குறித்து 30 நிமிடத்திற்கு மேல் பேசிக்கொண்டே இருந்தனர். பெண்ணிடமிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததால் PCR வேனில் அவரை ஏற்றக்கூட காவல்துறையினர் யோசித்து கொண்டிருந்தனர். இறுதியில் காயங்களுடன் இருந்த நானே அவரை தூக்கி PCR வேனில் ஏற்றினேன். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தூரத்தில் இருந்த Safdarjung Hospital க்கு எம்மை கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு காத்திருந்த போது, எனக்கு ஆடை தரும் படி கெஞ்சினேன். ஒருவரிடமிருந்து தொலைபேசியை வாங்கி எனது உறவினரை அழைத்து, அவர்கள் மருத்துவமனைக்கு வந்த பின்னரே சிகிச்சை அளிக்க தொடங்கினார்கள்.

எனது பெண் தோழியை மருத்துவமனையில் சந்தித்த போது  போது, என்னைப்பார்த்து புன்னகைத்தார். அவருக்கு வாழவிருப்பமில்லை என ஒரு போதும் நான் உணர்ந்திருக்கவில்லை. அவர் தன் குடும்பத்தினரிடம் கவலைப்பட வேண்டாம் என்றார். செலவை பற்றி விசாரித்தார். குற்றவாளிகளை உயிரோடு எரிக்க வேண்டும் எனக்கூறினார்.

அடுத்து நான்கு நாட்களுக்கு காலில் ஸ்ட்ரெட்சருடன் காவல்நிலையத்திலேயே கிடந்தேன். எனக்கு வேறு சிகிச்சைகள், அல்லது ஆலோசனைகள் எதுவுமே வழங்குவதற்கு அவர்கள் முன்வரவில்லை. எனது சொந்த செலவில் தனியார் மருத்துவமனையிலேயே மேலதிக சிகிச்சையை பார்த்துக்கொண்டேன்.

காவல்துறையினரின் அலட்சிய போக்குக்கு பொறுப்பேற்று பொலிஸ் தலைமை அதிகாரிகள் பதவி விலக வேண்டுமென நான் கூறமாட்டேன். எனினும் SHO, ACP, DCP அல்லது பொலீஸ் கமிஷினர் இப்படி யாராயினும் தங்களது கடமையில் குறைபாடு இருக்கிறதா என அவர்களே உணர்ந்து முடிவெடுக்கட்டும். மனச்சாட்சிபடி நடக்கட்டும் என்றார்.

மேலும் இச்சம்பவங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக போராட வேண்டியது அவசியமானது. வெறுமனே மெழுவர்த்தி ஏந்துவதால் மாற்றம் நடந்துவிடாது. நாங்கள் எங்களிடையே மாற்றிக்கொள்வவதற்கும் அதிகம் உள்ளன. இப்போது போராட தொடங்கியதால் தான் உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகள் எம்மை நோக்கி வர தொடங்கியுள்ளனர்.

புதிய சட்டத்திருத்தமோ, அதற்கு அப்பெண்ணின் பெயரையோ வைப்பதில் ஒன்றும் நடந்து விடாது. ஏற்கனவே பல சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா? எந்தவொரு சட்டமும் பெயரில் ஒன்றுமே இல்லை. பொதுமக்கள் எப்போதும் அவற்றின் பெயரை கொண்டோ, எந்த செக்க்ஷன் என்றோ  பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவது என்பதே முக்கியமானது என்றார்.

குற்றப்பத்திரிகையில் 17 வயது நபரின் பெயரைச் சேர்க்க வேண்டும்: தில்லி மாணவியின் சகோதரர் கோரிக்கை

டெல்லியில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையில் 17 வயது நபரின் பெயரையும் சேர்க்க வேண்டும் என  உயிரிழந்த மாணவியின் சகோதரர் தெரிவித்துள்ளார். ஒருவரின் வயதை காட்டி அவர் செய்த குற்றத்தின் அளவை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர் 18 வயதை எட்டுவதற்கு இன்னமும் நான்கு மாதங்களே எஞ்சியுள்ளன. எது சரி, எது தவறு என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே அவரை வயது வந்தவராகவே கருதி குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இது தொடர்பில்  சட்டரீதியாக முயற்சி எடுக்க போகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழகம், ஆந்திரம், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான ஆணையங்களை அமைக்காமல் இருப்பது ஏன் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஜனவரி 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இந்த மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக