January 15,
2013 05:28 pm
ஊழலை
ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் பாகிஸ்தான் பாராளுமன்றத்தை
முற்றுகையிட, பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் தாஹிருல் காதிரி அழைப்பு
விடுத்திருந்தார்
.
லாகூரில் இருந்து சுமார் 10 ஆயிரம் மக்களுடன் இஸ்லாமாபாத்
நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ஊர்வலமாக புறப்பட்டார்.
அப்போது
பேசிய அவர்,
´பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை பிரதமர் பதவியில் ராஜா பர்வேஸ் அஷரப் நீடிக்கக்
கூடாது. உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பிரதமர் உள்பட அனைத்து மந்திரிகளும் பதவி விலக வேண்டும்´ என்று
கூறி இருந்தார்.
இந்நிலையில், இன்று
காலை இஸ்லாமாபாத்திற்கு வந்து சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நெருங்காமல்
தடுப்பதற்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இஸ்லாமாபாத்திற்குள் நுழையும் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தன.
பாராளுமன்ற சாலையில் திரண்ட ஆண்களும், பெண்களும் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷங்களை
எழுப்பினர். அவர்களை அமைதிப்படுத்த முயன்ற பொலிசார் மீது சிலர் கல் வீசி தாக்குதல்
நடத்தினர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி பொலிசார் கண்ணீர் புகை
குண்டுகளை வீசினர். சிறிது தூரம் கலைந்து ஓடிய மக்கள் மீண்டும் திரும்பி வந்து
பொலிசார் மீது கற்களை வீசினர்.
கலவரம்
எல்லை மீறி போனதால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பொலிசார் எச்சரிக்கை
விடுத்தனர். எனினும்,
கலைந்து செல்ல மறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி பாராளுமன்ற சாலையில்
குழுமியுள்ளனர்.
இதனால், அப்பகுதியில் நீண்ட நேரம் பதற்றம் நீடித்தது
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக