puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 22 ஜனவரி, 2013

1.5 கிலோ முடியை சா‌ப்‌பி‌ட்ட இள‌ம்பெ‌ண்-ஆபரேஷ‌னி‌ல் அக‌ற்ற‌ம்


FILE
சாப்பிட்டவுடன் ஏற்பட்ட வயிற்றுவலி, வாந்தி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்‌ணி‌ன் வயிற்றிலிருந்து 1.5 கிலோ முடி அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

க‌ர்நாடகா மா‌நில‌ம் மங்களூரில் 20 வயதான கல்லூரி மாணவி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சாப்பிட்டவுடன் வ‌யிற்று வலி மற்றும் வாந்தியுடன் அவதியுற்றுள்ளார்.

இந்த நிலையில் வலி அ‌திகமா‌கியு‌ள்ளது. இதனை அடுத்து மங்களூ‌ரி‌ல் உ‌ள்ள இந்தியானா மருத்துவமனையில் அ‌ந்த பெ‌ண் அனுமதிக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளார்.

அ‌ப்போது, அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் வயிற்றில் சுமார் 1.5 கிலோ முடி இரு‌‌ந்துள்ளது சோதனை‌யி‌ல் தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் முடி மூட்டையாக நீக்கப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ட்ரைக்கொஃப்கியா என்னும் வியாதி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வியாதி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கே பெரும்பாலும் ஏற்படும்.

மன உளைச்சல் மற்றும் பிரச்சனைகளின் போது நகத்தை கடித்து துப்புவது, மெல்வது போல முடியை கடிக்கும் பழக்கம் இந்த வியாதிகாரர்களுக்கு ஏற்படும். இது ஒருவித மன நோயாகும்.

பலர் முடியை பிடுங்கி அதன் நுனிபாகத்தை சாப்பிடுவார்கள். சிலர் இந்த பழக்கத்தை பெரிதும் ரசிப்பவர்களாகவே இருப்பார்கள். நாளடைவில் நோய் முற்றிய நிலையில் முடிகள் அனைத்தையும் பிடுங்கி தலை சொட்டையான சம்பவங்கள் கூட உலகின் சில பகுதிகளில் நிகழ்ந்துள்ளதாம். ட்ரைக்கொஃப்கியா 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

tamil.webdunia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக