மெட்ரோ ரயிலில் டில்லி ராம்லீலா மைதானத்திற்கு வந்த அர்விந்த கெஜ்ரிவால், இன்று நண்பகல் 12மணியளவில் புதுடெல்லி மாநிலத்தின் 7வது முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர்தான் டெல்லி முதல்வர்களிலே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்றதும் பொதுமக்களிடையே உரையாடிய முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால், "இனிதான் எங்களின் உண்மையான போராட்டம் தொடங்கியுள்ளது. ஊழலை ஒழிப்பதுதான் எங்களின் முதல்கட்ட வேலை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அன்னா ஹசாரேவுடன் இதே இடத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டபோது இதுபோன்று முதல்வராக வருவேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
நாங்கள் அதிகாரிகள், போலீஸார்களை வைத்து ஆட்சி நடத்தப்போவதில்லை. மக்களை வைத்துதான் ஆட்சி நடத்தப்போகிறோம். முதல்கட்டமாக மின்கட்டணத்தை 50% குறைக்கப்படும். மேலும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று எங்கள் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்க செய்வோம்.
நாட்டில் உள்ள ஊழல் அழுக்கை போக்கினால் மட்டுமே முழு சுதந்திரம் கிடைக்கும். அந்த அழுக்கை போக்குவதற்கு பாரபட்சமின்றி,நடவடிக்கை எடுப்போம்.

இன்று டெல்லி முதல்வராக பதவியேற்றுக்கொண்ட அர்விந்த கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
thedipaar thanks