puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 28 டிசம்பர், 2013

பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டவர்களுக்கு டெல்லி அரசு இழப்பீடு வழங்குகிறது!


Scales with money and the earth
புதுடெல்லி:போலீஸ் ஜோடிக்கும் பொய் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகளுக்கு டெல்லி அரசு இழப்பீடு வழங்க உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற தகுதியானவர்கள் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆம் ஆத்மி கட்சி இன்று ஆட்சி பொறுப்பை ஏற்கிறது. எனினும், அதிகார மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இது தொடர்பாக நடந்து வருகிறது. 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்கு இளைஞர்கள் மீது கொள்ளை மற்றும் கொலை வழக்கை டெல்லி போலீஸ் பதிவுச் செய்தது.

ஆனால், ஒரு தொழிலதிபருக்காக பொய் சாட்சி கூறியதாக இவ்வழக்கின் முக்கிய சாட்சி விசாரணை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் க்ரைம் ப்ராஞ்ச் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் டெல்லி போலீஸ் பொய் வழக்கு சுமத்தியது தெரியவந்தது. விசாரணை காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 3 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர்கள் இழப்பீடு பெற தகுதியானவர்கள் என்றும் விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது.
போலீஸ் நடவடிக்கை மூலம் அரசியல் சாசனமும், மனித உரிமையும் கடுமையாக மீறப்பட்டதாக கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காமினி லாலுதெரிவித்தார். அதிகார துஷ்பிரயோகம் நடத்தும் போலீசும், அரசும் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, நான்கு பேருக்கும் 50ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்குச் சென்றது. உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதிச் செய்தது. பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஏற்கனவே டெல்லியில் பல நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன. ஏழு ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுதலைச் செய்த பிரேம்லால் என்ற இளைஞருக்கு போலீஸ் ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தீவிரவாதம் உள்ளிட்ட வழக்குகளில் இளைஞர்கள் மீது பொய் வழக்கை ஜோடிப்பது டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2006-ஆம் ஆண்டு தீவிரவாத வழக்கில் சிக்கவைக்கப்பட்ட கஷ்மீரைச் சார்ந்த பர்வேஸ் அஹ்மத் ராதுவை 2013-ஆம் ஆண்டு நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுதலைச் செய்தது. 2005-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி ஆறு இளைஞர்களை டெல்லி போலீஸ் கைதுச் செய்திருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் அனைவரையும் நீதிமன்றம் விடுதலைச் செய்தது. நான்கு உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த கைது நாடகத்தை நடத்தியதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக