- விவரங்கள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 11 டிசம்பர் 2013 16:15
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது முதுமொழி! அந்த
அளவுக்கு சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாக இருந்த ஆசிரிய சமூகத்தோடு இன்றைய மாணவ
சமூகம் சரியான புரிந்துணர்வு இல்லாமல் நாளுக்குநாள் இடைவெளி அதிகமாகி வருவது
கவலைக்குரிய விசயம்.
மாணவர்கள் ஆசிரியர்களைக் கிண்டலடிப்பதும்
,
ஆசிரியர்கள் மாணவிகளைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதும் அன்றாடம்
மீடியாக்களுக்கு தீனிபோடும் செய்தியாகி விட்டது. இந்நிலையில் ஆசிரியர்களின்
கண்டிப்புக்கு பயந்து தற்கொலை மிரட்டல் விடும் சம்பவத்தால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
நமக்கேன் வம்பு என்ற நிலையில் உள்ளனர். கடந்த மாதம் தேனி புறநகரில் 6 மாதங்களில் 10
மாணவர்கள் வரை எலிமருந்து, பேன்மருந்து, அரளிவிதை போன்றவற்றை சாப்பிட்டு
தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை மிரட்டல்
குறித்து பெயர் கூற விரும்பாத ஆசிரியர் கூறியதாவது:
"எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு
ஆசிரியர்களுக்கு இருக்கிறது. கண்டிப்பது என்பது மாணவர்களின் நலனுக்காக இருந்தால்,
அதை அனுமதிப்பதில் தவறில்லை. யாரோ, எங்கேயோ ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் வன்முறையாக
நடந்து கொண்டால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்தையும் குறைசொல்லமுடியாது.
கிராமப்புற மாணவர்களிடம் தற்கொலை முயற்சி அதிகம்
நடக்கிறது. இதற்கு காரணம் பெற்றோர்கள் தான். குறிப்பாக வீட்டில் சிறு பிரச்சினை
என்றாலும் செத்துவிடுவேன் என பெண்கள் மிரட்டுகின்றனர். இதை கேட்கும் பிள்ளைகளும்
தற்கொலையை ஆயுதமாக எடுக்கலாம் என்கிற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். தற்கொலை
முயற்சிப்பவர்களுக்கு, சிகிச்சை அளித்தபின் குடும்ப பின்னணியை ஆராய்ந்தால், இந்த
உண்மை தெரியவரும்.
மேலும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம்
நடத்தவே பயமாக இருக்கிறது. திட்டினாலோ, கண்டித்தாலோ தற்கொலை மிரட்டல்
விடுக்கின்றனர். திட்டக்கூடாது என்பதால், பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறுகிறோம்.
அதற்கும் இப்படி செய்தால், நாங்கள் எப்படித்தான் பாடம் நடத்துவது; மதிப்பெண்
பெறவைப்பது;, நல்ல சமுதாயத்தை உருவாக்குவது? மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு
நாங்கள்தான் கோர்ட், கேஸ் என்று அலையவேண்டியுள்ளது" என்றார்.
எனவே ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு செய்து தற்கொலை பற்றிய
விழிப்புணர்வு கவுன்சிலிங் வகுப்புகள் நடத்தினால் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
வைக்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
- வைகை அனிஷ்
inneram thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக