கண்ணூர்: பா.ஜ.க நிறுவிய நினைவிடத்தை உடைத்துவிட்டு சமூகத்தில் மோதலை உருவாக்க திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் சதித்திட்டம் தோல்வியை தழுவியது. கேரள மாநிலம் கண்ணூரில் தளாப்பு அம்பாடி முக்கு என்ற பகுதியில் மறைந்த பா.ஜ.க உறுப்பினர் கே.டி.ஜெயகிருஷ்ணன் நினைவாக கட்டப்பட்ட தூணையும், அங்கு கட்டப்பட்டிருந்த கொடி தோரணங்கள் மற்றும் ப்ளக்ஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய இரவு இச்சம்பவம் நடந்தது. இச்சம்பவத்திற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு பிரிந்து தனி இயக்கமாக செயல்படும் நமோ விசார் மஞ்ச் தான் காரணம் என்று பா.ஜ.க குற்றம் சாட்டி 2 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்களின் சதித்திட்டம் குறித்து அனுபவம் உடைய நமோ விசார் மஞ்சைச் சார்ந்த சிலர் அப்பகுதியில் சி.சி.டி.வியை முன்னரே நிறுவியிருந்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவர்கள் நினைவு தூண், ப்ளக்ஸ் மற்றும் கொடி தோரணங்களை சேதப்படுத்துவது பதிவாகியிருந்தது.
சம்பவம் நடந்த அன்று இரவு 12.45 மணியளவில் நான்கு ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பைக்கில் வந்து தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். சில நிமிடங்களிலேயே இவர்கள் பைக்கில் ஏறி விரைந்துவிட்டனர். இரண்டுபேரின் கைகளில் வாட்கள் உள்ளன. முகத்தை மூடியுள்ளனர்.சி.சி.டி.வியில் பதிவான காட்சியில் பா.ஜ.கவின் இளைஞரணியை சார்ந்த ஷிஜின், பிரின்ஸ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நினைவு தூண், ப்ளக்ஸ் மற்றும் கொடித்தோரணங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மறு நாள் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் முன்னணியில் நின்றிருந்தனர். சி.சி.டி.வி காட்சிகள் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நினைவு தூணை தகர்த்து கலவரம் உருவாக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டி நமோ விசார் மஞ்ச் சார்பாக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே நினைவு தூணை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய ஷிஜின் மீது முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக நமோ விசார் மஞ்ச் என்ற இயக்கத்தைச் சார்ந்த நபர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக