puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 10 டிசம்பர், 2013

மாற்றிக்கொள்ளுங்கள் இல்லையேல் அழிய நேரிடும்: கேஜ்ரிவால்


[ திங்கட்கிழமை, 09 டிசெம்பர் 2013, 0
காங்கிரசும், பாஜகவும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
தலைநகரான டெல்லி பிரதேசத்திற்கு நடந்த சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்துள்ளது.
தொடர்ந்து மூன்று முறையாக டெல்லியை ஆண்டு வந்த ஷீலா தீட்சித், புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோல்வியடைந்தார். முதல் முறையாக டெல்லி தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது கட்சியாக வந்துள்ளது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ஊழல் இல்லா ஆட்சியை மக்கள் வரவேற்கிறார்கள் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளார்கள். இந்த தேர்தலில் எங்களது முக்கிய பிரச்சாரமாக ஊழல் இருந்தது.
காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்கிற கட்டாயத்தில் மக்கள் இருந்தனர். இனி காங்கிரசும் பாரதீய ஜனதாவும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையேல் அழிந்துபோகவேண்டும் என்றும் இந்த தேர்தலில் சாதாரண மனிதர்கள் மூத்த அரசியல்வாதிகளை தோற்கடித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
newindianews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக