puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சமத்துவத்துக்காக கடைசிவரை போராடியவர் மண்டேலா: பிரணாப் முகர்ஜி புகழாரம்

[ புதன்கிழமை, 11 டிசெம்பர் 2013, 
நீதிக்கும், சமத்துவத்துக்குமான போராட்டத்தை கடைசிவரை வன்முறையற்ற வழியில் மண்டலோ முன்னெடுத்துச் சென்றார் என்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நாட்டை வழிநடத்திச் சென்று தேசத்தந்தை என்று போற்றப்படுபவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள எஃப்.என்.பி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு சமய பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்து மத பிரார்த்தனையின்போது சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் வாசிக்கப்பட்டன.
லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் திடீரென மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் குடை பிடித்தபடி நிகழ்ச்சியில் கடைசி வரை பங்கேற்றனர். பின்னர், நிறவெறிக்கு எதிரான பாடல்கள் பாடப்பட்டன.
இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து  வெளியிடுகையில்,
“சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் நெல்சன் மண்டேலா. நீதியற்றத்தன்மைக்கும், சமத்துவமின்மைக்கும் எதிரான போராட்டத்தை கடைசிவரை வன்முறையற்ற வழியில் முன்னெடுத்துச் சென்றார்.
மண்டேலா தொலைநோக்குச் சிந்தனைமிக்கவர். அவர் விட்டுச் சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கைகளை உலகம் என்றென்றும் போற்றும் என்பதில் சந்தேகமில்லை.
நிறவெறியாலும் வன்முறையாலும் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த நாட்டில் மண்டேலா மேற்கொண்ட போராட்டம், இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது. அதனால்தான், அவருக்கு இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதை கொடுத்து கவுரவித்துள்ளோம்.
மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றியபோது, சமத்துவமின்மைக்கு எதிராக போராட்டத்தை நடத்தினார். பின்னர், அந்த போராட்டத்தைத்தான் இந்தியாவிலும் தொடர்ந்து நடத்தினார்.
இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில்தான், மண்டேலாவும் அதிபராக இருந்தபோது வெளியுறவுக் கொள்கையை வகுத்தார்” என்றார்.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக