சென்னை, நவ. 19-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பெய்த கனமழையால் அந்த மாவட்டங்களில் உள்ள ஏராளமான ஏரிகள் நிரம்பின. முக்கியமாக சென்னைக்கு தண்ணீர் வழங்கக் கூடிய செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, பெருமளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்து நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது, ஆந்திராவின் பல இடங்களில் மழைபெய்து வருவதும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது.

news maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக