பீளமேடு, நவ.19–
கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 10.45 மணிக்கு 130 பயணிகளுடன் தனியார் விமானம் புறப்பட தயாரானது. அப்போது பயணிகளில் 3 பேர் குடிபோதையில் விமான பணிப்பெண்களிடம் தகராறு செய்ததாகவும், 3 பேரும் விமான பணிப்பெண்களை செல்போனில் போட்டோ
எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பணிப்பெண்கள் விமான அதிகாரிகளிடம் புகார் செய்தனர். உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழிக்குமாறு கூறினர். ஆனால் அதிகாரிகளிடமும் 3 பேரும் தகராறு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40), ராஜா (40), சுபாஷ் (32) என்று தெரிய வந்தது. இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்களில் செந்தில்குமாரும், ராஜாவும் வக்கீல்கள். சுபாஷ் இந்து மகாசபா இளைஞர் அணி நிர்வாகி ஆவார்.
இந்த சம்பவத்தால் 10.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 1 மணி நேரம் தாமதமாக 11.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.
news maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக