ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம்; மனு விசாரணை அக்.6 க்கு ஒத்திவைப்பு!
Posted Date : 11:20 (30/09/2014)Last updated : 13:09 (30/09/2014)
பெங்களூரு: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால், அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜாமீன் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஜெயலலிதா தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
"வழக்கில் தண்டனை விதிக் கப்பட்டு இருக்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்மைச்சராக இருந்தவர். ‘இசட்’ பிரிவு பாதுகாப்புடன் மிகமிக முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருப்பவர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார்.
எனவே அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். பெங்களூரில் உள்ள சூழ்நிலைகள் அவரது உடல் நிலைக்கு ஒவ்வாது என்பதால், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். நாட்டை விட்டும் வெளியேற மாட்டார்" என 15 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல், இந்த வழக்கில் தண்டனை பெற்று உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோருவது உள்பட தலா 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
மனு ஒத்திவைப்பால் ஜாமீன் கிடைப்பதில் காலதாமதம்
இந்நிலையில் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, விடுமுறைகால நீதிபதி ரத்னகலா முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் அரசு தரப்பிற்கு தரவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா சார்பில் ராம் ஜெத்மலானி
ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையின் போது, அவரது சார்பில், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடுகிறார். இதற்காக நேற்று அவர் அவசரமாக பெங்களூர் வந்தார்.அங்கு அவர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சசிகலாவுக் காக பிரபல மும்பை வழக்கறிஞர் அமீத்தேசாய் ஆஜராகி வாதாடுவார் என தெரிகிறது..அதேபோல சுதாகரனுக்காக அன்புக்கரசன் என்ற வழக்கறிஞர் வாதாடவுள்ளதாக கூறப்படுகிறது. இளவரசிக்கான வழக்கறிஞர் யார் என்பது தெரியவில்லை.
அரசு தரப்பில் பவானி சிங்
ஜாமீன் மனு விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வாதிடுகிறார்.
இதுகுறித்து பவானி சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடினேன். இந்த வழக்கில் சாட்சிகள் பலமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது. தீர்ப்பு முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.
அது மொத்தம் 1,136 பக்கங்களை கொண்டுள்ளது. தீர்ப்பு நகல் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்து உள்ளேன். அது கிடைத்ததும் தீர்ப்பை முழுவதுமாக படிப்பேன். ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக அறிந்தேன். அது பற்றி எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதை முழுவதுமாக படித்த பிறகே நீதிமன்றத்தி்ல் எனது கருத்தை தெரிவிப்பேன். தீர்ப்பை படிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும்" என்றார்.
news.vikatan thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக