239 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது
[ சனிக்கிழமை, 08 மார்ச் 2014, 02:50.17 மு.ப GMT ]
239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் நடுவழியில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 239 பயணிகள் இருந்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு சிறு பிள்ளைகள் அடங்கலாக 227 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் இந்த விமானம் காணாமல் போயுள்ளது.
ஆசியாவில் மிகப்பாரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான மலேசிய விமான சேவை, நாளாந்தம் 37 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு செல்லும் வழியில் வானில் மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் விமானம் வியட்நாமில் உள்ள தோசு தீவில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன, விமானத்தில் 154 சீனர்கள் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் மாயமாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எம்.எச் 370 விமானம் இழந்தது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் சர்வதேச விமான ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டது, விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் வியட்நாம் வான்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக