07-02-2014
அமெரிக்காவில் சில பகுதிகளில் தற்போது கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு வருவதால் பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று Pennsylvanians உள்பட பல நகரங்களில் பனிப்புயல் அடித்து வருகிறது. பென்சில்வேனியா நகரில் சுமார் 500,000 மக்கள் பனிப்புயல் காரணமாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். அந்நகரின் மீட்புப்படைகள் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியை கவனித்து வருகிறது.
Pennsylvanians சாலைகளில் ஒரு அடிக்கும் மேல் பனிக்கட்டி படர்ந்து இருப்பதால் போக்குவரத்து கடுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடுமையான பனிப்புயலால் முக்கிய சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளது. இந்த வார இறுதிவரை Pennsylvanians நகரில் மின்சாரம் இன்றி மக்கள் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என Pennsylvania Public Utility Commission செய்தித்தொடர்பாளர் Jennifer Kocher அவர்கள் நேற்று அளித்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 1 லட்சம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதாக Pennsylvanians நகர மின்சார அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சார கோளாறுகளை சரிசெய்ய அதிகாரிகள் இரவு பகலாக முழுவீச்சில் போராடி வருகின்றனர்.
news thedipaar. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக