- THURSDAY, 06 FEBRUARY 2014 10:06
காமன் வெல்த் தொடர்பான ஊழலை முழு விசாரணை நடத்தி அதன் மூலம் உறுதி செய்வோம் என்று, டெல்லி ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி கூறியுள்ளார்.
டெல்லியில் காமன்வெல்த் மாநாடு கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விளையாட்டின் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் வந்ததை அடுத்து, வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரித்து வந்தது. அப்போது பிரதமர் மன்மோகன் சிங்கால் அமைக்கப் பட்டு இருந்த விசாரணைக் குழு, டெல்லி மாநகராட்சி மீதும், அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீதும் குற்றம் சாட்டி இருந்தது. ஆனால், அந்த குழுவின் குற்றசாடை முழுவதுமாக மறுத்து இருந்ததோடு, குழுவின் மீதான அவ நம்பிக்கையையும் ஷீலா தீட்சித் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இது குறித்து விசாரிக்க டெல்லி அரசு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது கெஜ்ரிவால் கொடுத்து இருந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வழக்கு விசாரணை அடிப்படையில் ஷீலா தீட்சித் மீது வழக்கு தொடரப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில்தான் காமன் வெல்த் தொடர்பான ஊழல்களை விசாரித்து, முழு விசாரணை மூலம் குற்றம் உறுதி செய்யப்படும் என்று டெல்லி அரசின் சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்த்தி கூறியுள்ளா

news 4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக