பிரான்ஸ் அரசு சமீபத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்தை கொண்டு வந்தது. அதுமட்டுமின்றி கருக்கலைப்பு குறித்த சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இதனால் குடும்ப அமைப்புகளோடு வாழ்ந்து வரும் பிரான்ஸ் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் இன்று பிரமாண்டமான பேரணி ஒன்றை பாரீஸ் நகரில் நடத்தினர். சுமார் 80 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் திரளாக கலந்து கொண்ட இந்த பேரணியால் பாரீஸ் நகரமே குலுங்கியது. பிரான்ஸ் அதிபர் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் குடும்ப வாழ்க்கையை சிதைக்கும்படியான சட்டங்களை இயற்றி வருகிறார் என்ற கோஷத்துடன் சென்ற பேரணி, உடனடியாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்தை திரும்பப்பெருமாறு அதிபரை வலியுறுத்தினர்.
குடும்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால்தான், அதிபர் இதுபோன்ற பைத்தியக்கார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் பாரீஸ் நகர தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். இந்த பேரணியால் பிரான்ஸ் அரசு கடும் நெருக்கடியில் இருக்கிறது.
thedipaar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக