puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

லங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து இந்திய அரசு தீவிர ஆலோசனைக் கூட்டம்!



08-02-2014 10:55:22

ஐ.நா. மனித  உரிமைகள் சபையின் 25 ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள  கடுமையான பிரேரணை விவகாரத்தில் எத்தகைய நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா தற்போது  தீவிரமாக ஆலோசித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுக்கின்றது.  

அதேவேளை, காங்கிரஸ் அரசு, இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சரவை மட்டத்திலும்   கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றது. இந்திய அரசியல் பிரமுகர் ஒருவர் நேற்று மாலை இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.     இதற்கு முன்னர் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்திருந்தது. எனினும், "மதில் மேல் பூனை' என்ற நிலைப் பாட்டில் இருந்துவிட்டு இறுதி நேரத்தில் இந்தப் பிரேரணைகளை நீர்த்துப் போகச் செய்து விட்டு அவற்றுக்கு ஆதரவாக டில்லி வாக்களித்திருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.  
  
இம்முறை இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பிரேரணையைக் கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்தியத்துணைத் தூதுவர் தேவயானி சோதனையிடப்பட்ட விவகாரம் மற்றும் இலங்கையுடனான  சம்பூர் உடன்படிக்கை உட்பட இந்தியாவின்  பொருளாதார திட்டங்களும் மேலும் சில விடயங்களும் இந்தப் பிரேரணை  தொடர்பில் டில்லியை சிந்திக்க வைத்துள்ளது.  
 
அதேவேளை, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வரும்  தமிழகத்தின் செயற் பாடுகள், அண்மையில் இடம் பெற்ற மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வி மற்றும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய விடயங்கள் ஜெனிவாப் பிரேரணையை டில்லி அரசு ஆதரிக்கவேண்டும் என்றதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளன.   
 
இவ்வாறான நிலையில், அடுத்த மாதம் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள கடுமையான பிரேரணை விடயத்தில் எத்தகைய நிலைப் பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.   "மதில் மேல் பூனை' என்ற நிலைப்பாட்டில் இருந்துவிட்டு இறுதியில் இந்தப் பிரேரணை தொடர்பில் அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சு நடத்தி அதனை நீர்த்துப்போகச் செய்துவிட்டே அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று டில்லி இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.   
 
 இதேவேளை, அண்மையில் டில்லி சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அங்கு  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்த்துடன் நடத்திய பேச்சின்போது ஜெனிவாவில் இம்முறை அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். எனினும், பீரிஸின் இந்தக் கோரிக்கைக்கு டில்லி அரசு சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
 
 
 
நன்றி
உதயன்

news  thedipaar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக