puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பாப்புலர்ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மீது போலீசார் தாக்குதல்







பாப்புலர்ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க தினமான பிப்ரவரி 17ல் பேரணி நடத்த திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர் அமைப்பினர். குமரய்யா கோவில் தொடங்கி சின்னக்கடை வழியாக வர வேண்டும். பின் சின்னக்கடை வீதியில் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது காவல்துறை.

அதே போல் பேரணி வரும் பொழுது, பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கற்கள் வீசப்பட, பதிலுக்கு பேரணியில் கலந்து கொண்டவர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட, கலவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல்துறையும் தடியடியில் இறங்கியது. 
தடியடியில் ஏராளமான அளவில் பாப்புலர்ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தாக்கப்பட்டு, இரத்தக் காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் இவ்வேளையில், காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
இது குறித்து கருத்து தேரிவித்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர்.," இராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. பேரணி துவங்கும் நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழப்பத்தை பயன்படுத்தி விசமிகள் கூட்டத்தின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதை காரணம் காட்டி கூட்டத்தினர் மீது மிக கொடூரமாக காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியதோடு தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறி வைத்தும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு காவல்துறையால் அரங்கேற்றப்பட்டதாகவே தெரிகிறது. கல்வீசிய விசமிகள் சிலரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையின் வன்முறை வெறியாட்டமும், துப்பாக்கிச்சூடும் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் மிக அமைதியான முறையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மாத்திரம் காவல்துறையினரின் தாக்குதலும், அணுகுமுறையும் வேதனைக்குரியது. நாடு முழுவதும் எத்தனையோ, ஊர்வலங்கள் பேரணிகள் நடைபெறும்போது, முஸ்லிம்கள் நடத்தும் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் காவல்துறையினரின் நடவவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் தமிழக அரசிற்கெதிராக முஸ்லிம்களை திருப்ப முயற்சி செய்திருப்பது, அரசுக்கு எதிரான காவல்துறையின் சதியா என்ற கோணத்தில் தமிழக அரசு சிறப்பு புலனாய்வு மூலம் விசாரணை நடத்த வேண்டும்.

சிறுபான்மையினர் மீதான இந்ததாக்குதலுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ஊர்வலத்திற்கு பாதுகாப்புவழங்காததோடு, வன்முறைக்கு காரணமான இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஏ.டி.எஸ்.பிவெள்ளத்துரை ஆகியோரை உடனடி இடமாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

நாகேந்திரன்

nakkheeran thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக