puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 29 ஜனவரி, 2014

அரியவகை தாவரங்களுடன் உருவாகும் புதிய பூங்கா

[ புதன்கிழமை, 29 சனவரி 2014
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதங்களை முன்னிலைப்படுத்தி, துபாயில் புதிய பூங்கா ஒன்று உருவாகி வருகின்றது. இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில், பல்வேறு விதமான அற்புதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை முன்னிலைப்படுத்திக் காட்டக்கூடிய விதத்தில், அந்தப் புனித நூலில் வரும் 54 வகையான தாவரங்களில் 51 வகைகளைக் கொண்ட ஒரு மாதிரி பூங்காவை துபாய் அரசு உருவாக்கி வருகின்றது.
2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த பூங்கா, 158 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகின்றது.
மூன்று கட்டங்களாக இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்கள் அத்தி, மாதுளை, ஆலிவ், சோளம், அல்லி மலர் இனத்தைச் சார்ந்த செடி வகை, பூண்டு, வெங்காயம், பருப்பு, பார்லி, கோதுமை, இஞ்சி, பூசணி, தர்பூசணி, புளி, திராட்சை, வாழை, வெள்ளரி, துளசி உள்ளிட்ட 54 வகைகள் உள்ளன.
இவற்றில் 31 வகை தாவரங்கள் இந்தப் பூங்காவில் பயிரிடப்பட்டுள்ளன, குர்ஆனில் குறிப்பிட்டுள்ளவற்றில் மூன்று மட்டும் தற்போது பூமியில் இல்லை.
அவை தவிர மீதி 20 வகை தாவரங்களும் மூன்றாவது கட்டத்தில் பயிரிடப்படும் என்று அந்நாட்டின் பொது திட்டங்கள் துறையின் இயக்குநர் முகமது நூர் மஷ்ரூம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பூங்காவில் குளிரூட்டப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு அதில் புனித நூலில் வரும் கதைகளும், அற்புதங்களும் காட்டப்பட உள்ளன.
மேலும் இந்தப் பூங்காவின் மத்தியில் கண்கவர் மரங்கள் மற்றும் மணற்பரப்புடன் அமைந்துள்ள ஏரியானது பாலைவனச்சோலை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் என்றும் மஷ்ரூம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டின் தொடக்கத்தில் துபாய் நகராட்சியின் தொழில்நுட்பக் குழுவின் ஆயிரமாவது கூட்டம் நடைபெற்றபோது, 7 மில்லியன் அமெரிக்க டொலர் திட்ட மதிப்பீட்டுடன் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.


newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக