ராமநாதபுரம், ஜன.
தனுஷ்கோடி நடுநிலை பள்ளிக்கு சூரிய சக்தி மின்சார வசதி அமைக்க ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 1964–ம் ஆண்டு புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியில் சுமார் 200 மீனவ குடும்பங்கள் குடிசையில் வசிக்கின்றனர்.
இக்குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்காக தமிழக அரசு அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பாக 2002–ம் ஆண்டு ஓர் ஆசிரியர் பள்ளியை தொடங்கியது. பின்னர் இது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இருந்தும் பல அடிப்படை வசதிகள் இங்கு செய்யப்படாத நிலையே உள்ளது.
இதுகுறித்து வந்த தகவலை அடுத்து சென்ற செப்டம்பர் மாதம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தனுஷ் கோடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் தனது தொகுதி மேம்பட்டு நிதி மூலம் 2013–-2014–ம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் செலவில் சூரிய சக்தி மின்வசதி ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதுகுறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபரிடம் கூறும்போது, இப்பணி விரைவில் துவங் கும். தனுஷ்கோடி பள்ளியில் 3 மின்விசிறிகள், ஆறு மின்விளக்குகள் மற்றும் கணினி, தொலைகாட்சி இயக்குவதற்கான பிளக்குகள் இதன் மூலம் இயங்கும்“ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக