அஹ்மதாபாத்: குஜராத்தில் ஆளும் பாஜக அரசின் ஊழலை வெளிக்கொண்டு வரும் நோக்கில், ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பங்களை ஏந்தியபடி பிரசார பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.
இது தொடர்பாக அக்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷில் நாயக் கூறுகையில், “அஹ்மதாபாதின் லால் தர்வாஜா பகுதியில் இருந்து பிரச்சாரப் பயணம் தொடங்கியது. மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் இந்தப் பிரசாரப் பயணம் செல்லும். காந்தி நகரில் 30-ம் தேதி இப்பயணம் நிறைவடைகிறது.
ஜனவரி 30-ம் தேதிதான் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், குஜராத்தில் காந்தி எப்படி ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிறார் என்பதை ஆம் ஆத்மி வெளிக்கொண்டு வரும் என்று தெரிவித்தார்.
பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஷுதோஷ் கூறுகையில், “குஜராத்தில் நிலவும் ஊழலை ஒழிக்கவில்லை என்றால், மாநிலத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்படாது” என்று தெரிவித்தார்.
குஜராத்தில் மட்டும் இதுவரை ஆம் ஆத்மி கட்சியில் 2.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டியிட முடிவு செய்துள்ளது.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக