முஸஃபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர். இவர்கள் ஷாம்லியில் மலேக்பூர் முகாமில் தங்கியுள்ளனர்.அதிகாரிகளின் கோரிக்கையை இவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு அவர்கள் அஞ்சுவதால் முகாம்களை விட்டு வெளியேற மறுக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான குளிரால் முகாம்களில் துயரங்களை அனுபவிப்பதால் அவர்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக ஷாம்லி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பி.கே.சிங் கூறுகிறார்.
பாதிக்கப்பட்ட மக்களை பலம் பிரயோகித்து நீக்கம் செய்ய முயற்சித்ததாக வெளியான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த முகாமில் தங்கியுள்ளனர். வீடுகளுக்கு திரும்பும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி அளித்துள்ளதாக எஸ்.பி பகவத் ஜே.கே.ஷாஹி தெரிவித்தார்.
வீடுகளுக்கு திரும்ப மக்கள் தயங்கியதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளின் குழு திரும்பிச் சென்றது.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக