சென்னை, நவ.11-
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை கிடைக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் ஓரளவுக்குதான் மழை பெய்யும். தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. வழக்கமாக தீபாவளியையொட்டி மழை பெய்யும் என்றும், ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும் என்றும் சொல்வார்கள். ஆனால் இந்த வருடம் தீபாவளியையொட்டியும் மழை பெய்யவிலலை. ஐப்பசி மாதம் முடிய இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. ஐப்பசி மாதமும் மழை பெய்யவில்லை. ஏதோ மார்கழி மாதம் வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு இரவில் குளிர் இருக்கிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ஆனால் அது தமிழ்நாட்டில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது. இன்னும் 3 நாட்கள் கழித்துதான் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் அதனால் மழை வருவது குறித்து கூறமுடியும். இப்போதைக்கு தமிழ்நாட்டில் குறிப்பாக தென்மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்யும்.

maalaimalar THANKS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக