puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 3 நவம்பர், 2013

பூச்சித் தொல்லை - சமூக மட்டத்தில் ஒழிக்கும் தேசிய திட்டம்

சமூக மட்டத்தில் ஒழிக்கும் தேசிய திட்டம்
பூச்சித் தொல்லை


"அங்கை பொடியளுக்கு பூச்சி மருந்தே குடுக்கிறாங்கள் இல்லையாம். அதுதான் உங்களிட்டை கூட்டிக் கொண்டு வந்தனான்" 

பெர்பியூம் வாசனை அறை முழுவதையும் நிறைந்;தது. தாய் மகளையும் இரண்டு பேரப் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவர்கள் அமெரிக்காவில் வாழ்பவர்கள். விடுமுறைக்கு தாய்நாடு வந்திருந்தார்கள்.

பொதுவாகக் பூச்சி என்று சொல்லப்படும் குடற் புழுக்கள் அங்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அதனால் பூச்சி மருந்து வழமையாக கொடுக்க வேண்டிய தேவை அங்கு ஏற்படுவதில்லை.

"போன மாதம்தான் பூச்சி மருந்து குடுத்தனீங்கள். இப்ப இரவிலை பல்லை நெறுமுறான் திருப்பி ஒருக்கால் குடுப்பம் " என்றார் மகனோடு வந்த இளம் தந்தை. பல் நொறுமுவதற்கும் பூச்சிக்கும் தொடர்பே கிடையாது. அது பொதுவாக உளநெருக்கீடு மற்றும் மனப் பதற்றத்தின் வெளிப்பாடு ஆகும். அல்லது சொத்தியான பற்கள் மற்றும் அகற்றப்பட்ட பற்கள் காரணமாவதுண்டு.

குடற் புழுக்கள்

பூச்சி என நாம் ஒருமையில் சொன்னாலும் அவற்றில் பல வகைகள் உண்டு. வட்டப் புழு, கொக்கிப் புழு, மற்றும் சாட்டைப் புழு ஆகியனவே பெருமளவு காணப்படுகின்றன. குடற் புழுத் தொற்றுள்ளவர்கள் மலங் கழிக்கும்போது மலத்தோடு அவற்றின் முட்டைகள் வெளியேறும்.

கொக்கிப்புழு தொற்றும் முறை

சுகாதார முறைப்படி மலங்கழித்து அகற்றாவிட்டால் அந்த மலத்தினால் மண் மாசுறும். மண்ணை அளைந்த கையை நன்கு கழுவாது உணவு உண்டால் அல்லது வாயில் கையை வைத்தால் அவற்றின் முட்டை அல்லது குஞ்சுகள் தொற்றிவிடும்.

காலணி அணியாது மண்ணில் நடந்தால் கொக்கிப் புழுக் குஞ்சுகள் சருமத்தை ஊடுருவித் தொற்றிவிடும்.

வட்டப்புழு தொற்றும் முறை


இதனால்தான் முற்று முழுதாக குழாய் மூலம் கழிவகற்றும் நடைமுறையுள்ள நகர்புறங்களில் இவற்றின் தொற்று அதிகம் காணப்படுவதில்லை. உலகளாவிய ரீதியில் குடற் புழுக்களின் தாக்கத்தால் மக்கள் முக்கியமாக குழந்தைகளும் கரப்பணிகளும் நோயுறுகிறார்கள்.; ஒரு சில அரிதான தருணங்களில் மரணிப்பதும் உண்டு.


எத்தகைய தாக்கங்கள்

குடற்புழுக்களின் தாக்கத்தால் பொதுவாக பின் வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

  • உணவில் இருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துகளை உணவுக்கால்வாய் அகத்துறுஞ்சுவதில் ஏற்படும் சிக்கல்கள்.
  • பசிக்குறைவினால் உணவு உட்கொள்வது குறைவது.
  • குடற்புழுக்கள் உணவுக் கால்வாயிலும், பித்தக் குழாய்களில் சிக்கி அடைப்பை ஏற்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
  • வயிற்றுக்கடுப்பு, வயிற்றோட்டம்
  • சாட்டைப் புழுவினால் மலக்குடல் வெளித்தள்ளல்.
  • கொக்கிப் புழுவினால் ஏற்படும் இரும்புச்சத்துக் குறைபாட்டு இரத்தசோகை
போன்றவை அடங்கும். இவை உடனடியாக ஏற்படும் தாக்கங்களாகும்.

சாட்டைப் புழுவினால் மலக்குடல் வெளித்தள்ளல்.

கடுமையான குடற்புழுத் தாக்கத்தினால் உடல் நலத்தில் பின்வரும் நீண்டகாலத் தாக்கங்கள் ஏற்படுகின்றன.

  • உடல் வளர்ச்சியில் (உடை, உயரம் அடங்கலாக) குறைபாடு
  • புலனுணர்வுகளின் வளர்ச்சிக் குறைபாடு
  • தொழிலாளர்களின் வேலைத் திறனும் உற்பத்தி ஆற்றலும் குறைவடைதல்
  • இரும்புச்சத்துக் குறைபாட்டு இரத்தசோகை ஏற்படுவதால், பிள்ளைகள் பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்ல முடியாமையும் கற்கை ஆற்றல் பாதிப்புறுவதும் நேர்கிறது.


எனவே சமூக மற்றும் தேசிய மட்டத்தில் இத்தகைய தாக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்குமுகமாக இலங்கை சுகாதார அமைச்சு சில உத்திகளை நடைமுறைப் படுத்துகிறது.

குடற்புழுத் தொல்iயைப் பொறுத்தவரையில் இலங்கையை இரு வலயங்களாகப் பிரிக்கின்றனர். கடுமையான மற்றும் மிதமான தாக்கங்கள் உள்ள இரு பகுதிகளாக கணிப்பீடுகளின் அடிப்படையில் பிரித்துள்ளனர்.
கடுமையான தாக்கமுள்ள பகுதிகளாக ஊவா, சப்பிரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இங்கு 20 முதல் 50 சதவிகிதமான தாக்கம் இருப்பதாக எண்ணப்படுகிறது

மிதமான தாக்கமுள்ள பகுதிகளாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் கொள்ளப்படுகிறது.  இங்கு 10 முதல் 20 சதவிகிதமான தாக்கம் இருப்பதாக எண்ணப்படுகிறது.

எவ்வாறு குடற்புழு மருந்து கொடுக்கப்பட வேண்டும் 

கடுமையான தாக்கமுள்ள பகுதிகளில்

5 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு.---
1 ½ வயது முதல் 5 வயது வரையான காலத்தில் வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஆறு மாத இடைவெளிகளில் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரைகளை குழந்தை நலக் கிளினிக்குகளில்(Child welfare clinic) கொடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மாத்திரைகளை விழுங்க முடியாத குழந்தைகளுக்கு அவற்றை இரு கரண்டிகளுக்கு இடையில் வைத்து நசுக்கி கொடுப்பது அவசியம்.

அத் தருணங்களில் விற்றமின் ஏ (Vitamin A megadose) மெகாடோஸ் மருந்துகளும் அங்கு வழங்கப்படுகிறது.

தரம் 1 முதல் 10 வரையான பாடசாலைப் பிள்ளைகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஆறு மாத இடைவெளிகளில் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரைகளை கொடுக்கப்படும்

கர்பணித் தாய்மாருக்கு கர்ப்பம் தரித்த மூன்று முதல் ஆறு மாதப் பகுதியில் மெபன்டசோல்Mebendazole 500 mg மாத்திரை ஒரு முறை மட்டும் கொடுக்கப்படும்.

மிதமான தாக்கமுள்ள பகுதிகளில

5 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு.---


½, 2, 3, 4, 5  வயதுகளில் அதாவது வருடத்திற்கு ஒருமுறை 500 mg மாத்திரைகளை குழந்தை நலக் கிளினிக்குகளில் (Child welfare clinic) ) கொடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல மாத்திரைகளை விழுங்க முடியாத குழந்தைகளுக்கு அவற்றை இரு கரண்டிகளுக்கு இடையில் வைத்து நசுக்கி கொடுப்பது அவசியம். அத் தருணங்களில் விற்றமின் ஏ(Vitamin A megadose) மெகாடோஸ் மருந்துகளும் அங்கு வழங்கப்படுகிறது.

தரம் 1 முதல் 10 வரையான பாடசாலைப் பிள்ளைகளுக்கு வருடாந்தம் ஒரு முறை மட்டும் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரை கொடுக்கப்படும்

கர்பணித் தாய்மாருக்கு கர்ப்பம் தரித்த மூன்று முதல் ஆறு மாதப் பகுதியில் மெபன்டசோல்Mebendazole 500 mgமாத்திரை ஒரு முறை மட்டும் கொடுக்கப்படும்.

அனைவருக்குமான மேலதிக விபரங்கள்

  • பாடசாலைப் பிள்ளைகளுக்கு இரத்த சோகையைத் தடுப்பதற்காக குறிப்பட் காலத்திற்கு இரும்புச்சத்து, போலிக் அமிலம், மற்றும் விற்றமின் சீ மாத்திரைகள் வழங்க்கடுகிறது. அதே போல கர்பணித் தாய்மாருக்கு இரும்புச்சத்து, கல்சியம் மற்றும் விற்றமின் சீ மாத்திரைகள் வழங்க்படுகிறது.
  • ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடற் புழு மருந்து கொடுக்கும் அதே நேரத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் மெபன்டசோல் Mebendazole 500 mg மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
  • பைரன்டின் (pyrantin) > அல்பன்டசோல் (albendazole) போன்ற வேறு குடற்புழு மருந்துகளும் இங்கு கிடைக்கின்றன. ஆயினும் இத்தேசிய திட்டத்தில் அவை சேர்க்கப்படவில்லை. அவை தடை செய்யப்பட்ட மருந்துகள் அல்ல. அவையும் பரவலாக உபயோகிக்கப்படுகின்றன.
  • Mebendazole பெற்றவர்கள் இவற்றை மீள உபயோகிப்பது அவசியமல்ல. தேவையாயின் மருத்துவர் ஆலோசனை பெறுங்கள்.



பக்க விளைவுகள் ஏற்படுமா?

பொதுவாக பாரதூரமான பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை.  சாதாரண வயிற்று வலி, ஓங்காளம், வாந்தி, வயிற்றோட்டம், சோர்வு போன்றவை ஏற்படலாம். மருத்துவரை நாட வேண்டியதில்லை. தானே குணமாகிவிடும். மிக அரிதாக குடற் புழுக்கள் மேலெழுந்து வாயால் வருவதுண்டு.

காய்ச்சல் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் இருந்தாலும் கொடுப்பதில் தவறில்லை. என்றபோதும் குறிப்பட்ட நோயால் ஏற்படும் வேறு அறிகுறிகளை மருந்தினால் எற்பட்டதோ என பெற்றோர்கள் ஐயுறுவதால் ஒரிரு நாட்கள் கழித்து அந்நோயின் தாக்கம் தணிந்த பின்னர் கொடுக்கலாம்.
தடுப்பதற்கு வேறு என்ன செய்யலாம்

  • மனித மலம் சுகாதார முறைப்படி அகற்றப்பட வேண்டும். பாலகர்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றி எல்லோரது மலத்திற்கும் இது பொருந்தும்.
  • காலணிகள் இன்றி ஒருபோதும் வெளியே நடக்க வேண்டாம்.
  • கொதித்து ஆறிய அல்லது சுத்திகரிக்கபட்ட நீரையே அருந்த வேண்டும். உணவு மற்றும் நீர் ஆகாரங்கள் சுகாதார முறைப்படி தயாரித்து உண்ணப்பட வேண்டும். 


கை கழுவுதல் போன்ற தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேண வேண்டும்.
இது Ministy of health d; Guidelines on De worming Children and Pregnant women in community setting 2013-2016 என்ற ஆவணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. முழுமையான மொழிபெயர்ப்பு அல்ல.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

hainallama thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக