ராமநாதபுரம், நவ. 19–
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீஸ்காரர் ராமேசுவரத்தை சேர்ந்த முனியசாமி மகன் நம்புராஜ் (21) என்பவர் தங்கியுள்ளார். நேற்று இரவு நம்புராஜ் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த ஒரு பாம்பு அவரை கடித்தது.
உடனே அவர் பாம்பை பிடிக்க முயன்றார். பாம்பு அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கடலாடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகப் பெருமாள் என்பவரையும் பாம்பு கடித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர், பாம்பை விரட்டிச் சென்று பிடித்தார்.
பின்னர் நம்புராஜ், முருகப்பெருமாள் ஆகியோர் தங்களை கடித்த பாம்புடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடித்த பாம்பு கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்தது என தெரியவந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக