puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 12 அக்டோபர், 2013

சீனாவின் போர்க்கப்பல் சுற்றிவளைப்பு! தூத்துக்குடியில் பதற்றம்


[ சனிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2013,
தூத்துக்குடி அருகே சீனாவின் போர்க்கப்பல் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்ற போது சீனா பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
சீனக்கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில், சீனாவின் ஆதிக்கம் என்பதால் அங்கிருந்து இந்திய கடற்பரப்புக்குள் அந்த கப்பல் ஊடுருவியதா? அல்லது சீனா வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பாக வந்ததா? என்றும் அந்த கப்பலில் ஆயுதங்கள் ஏதேனும் இருக்கிறதா எனவும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்த விசாரணையில் அது சீனாவின் போர்க்கப்பல் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவு கட்டளை அதிகாரி ஆனந்தகுமார் கூறுகையில், கப்பல் பிடிபட்டது உண்மை. அது வியாபாரக் கப்பலோ, மீன் பிடி கப்பலோ இல்லை. போர்க்கப்பல் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் மேற்கொண்டு எந்த தகவலையும் இப்போதைக்குக் கூற இயலாது எனவும் கூறியுள்ளார்.





newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக